news

News September 2, 2024

இந்த வரலாற்று போரில் வெற்றி உறுதி: ராகுல்

image

பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் இந்த வரலாற்று போரில் வெற்றி பெறுவோம் என ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார். முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடர்வதை அரசு மவுனமாக பார்த்து கொண்டிருப்பதாகவும், மாட்டிறைச்சி என்ற பெயரில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News September 2, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: இல்வாழ்க்கை ▶குறள் எண்: 41 ▶குறள்: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ▶பொருள்: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

News September 2, 2024

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

image

பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் ஆண்களுக்கான T47 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2.07 மீ உயரம் தாண்டி தனது அதிகபட்ச திறனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம், இந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா 7ஆவது பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. முன்னதாக, டோக்யோ ஒலிம்பிக்ஸிலும், அவர் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

News September 2, 2024

ஷாருக்கானுக்கு இவ்வளவு சொத்து மதிப்பா?

image

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ₹7,300 கோடி சொத்து இருப்பதாக ஹுருன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ₹4,600 கோடி சொத்துமதிப்புடன் ஜுஹி சாவ்லா இருக்கிறார். 3ஆம் இடத்தில் ஹிருத்திக் ரோஷனும், 4ஆம் இடத்தின் அமிதாப் பச்சன் குடும்பத்தினரும் இருக்கின்றனர். ஷாருக்கான் அடுத்தபடியாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

News September 2, 2024

செப்டம்பர் 2: வரலாற்றில் இன்று

image

*1862 – யாழ்ப்பாணத்தில் ஜாஃப்னா ஃபிறீமேன் என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியானது. *1946 – பிரிட்டன் இந்தியாவில் ஜவகர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அரசு உருவானது. *1985 – ஈழப்போர்: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் மு. ஆலாலசுந்தரம், வி. தர்மலிங்கம் ஆகியோர் தமிழ்க் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டனர். *2023 – இந்திய சூரிய ஆய்வு விண்கலம் ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக சூரியனை நோக்கி ஏவப்பட்டது.

News September 2, 2024

தெலங்கானாவில் 110 கிராமங்கள் மூழ்கின

image

கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆந்திராவிலும் வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரு மாநில முதல்வர்களையும் மத்திய அமைச்சர் மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

News September 2, 2024

தோனியால் யுவராஜ் சிங் வாழ்க்கை நாசமானதா?

image

யுவராஜ் சிங்கிற்கு பாரத ரத்னா கிடைக்க வேண்டியது, ஆனால் தோனியால் அவரது வாழ்க்கை நாசமானதாக யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். கேன்சரில் இருந்து மீண்ட பின் 4-5 ஆண்டுகள் யுவராஜால் இந்திய அணிக்காக விளையாட முடிந்திருக்கும் எனவும், ஆனால் அந்த வாய்ப்பை தோனி பறித்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக தோனியை எப்போதும் மன்னிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர்-2 (ஆவணி 17) ▶திங்கள் ▶நல்ல நேரம்: 06:15-07:15 AM & 04:45-05:45 PM ▶கெளரி நேரம்: 09:15-10:15 AM & 07:30-08:30 PM ▶இராகு காலம்: 07:30-09:00 AM ▶எமகண்டம்: 10:30-12:00 PM ▶குளிகை: 01:30-03:00 PM ▶திதி: அமாவாசை ▶நட்சத்திரம்: மகம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶யோகம்: மரண, சித்த யோகம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம்.

News September 2, 2024

கேரள காங்கிரஸிலும் பாலியல் தொல்லை?

image

கேரள காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு கிடைக்க வேண்டுமென்றால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய நிலை இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த சிமி ரோஸ்பெல் ஜான் குற்றம்சாட்டிய சில மணி நேரங்களிலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவதாக கட்சி அவரை நீக்கியுள்ளது. கண்ணியம் உள்ள பெண்கள் அக்கட்சியில் பயணிக்க மாட்டார்கள் என சிமி கருத்து தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்டம்பர் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!