news

News September 2, 2024

INDIAN BANK வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்தியன் வங்கியில் 300 பணியிடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 300 LOCAL BANK OFFICERS பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வங்கி கோரியிருந்தது. அதன்படி, இந்தியன் வங்கி இணையதளத்தில் நடைபெற்ற விண்ணப்பிக்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது. இத்தகவலை வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.

News September 2, 2024

இன்று இடி-மின்னலுடன் மழை கொட்டும்

image

தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. நாளை முதல் 7ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

News September 2, 2024

ப்ரீத்திக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

image

பாரா ஒலிம்பிக்ஸில் 2 பதக்கங்களை வென்ற ப்ரீத்தி பாலை கண்டு நாடு பெருமை கொள்வதாக குடியரசு தலைவர் முர்மு வாழ்த்தியுள்ளார். ப்ரீத்தியின் வெற்றி, இளைஞர்கள் மத்தியில் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துவதாக பாராட்டியுள்ளார். அதேபோல் பிரதமர் மோடி, ப்ரீத்தியின் வரலாற்று வெற்றி நாட்டு மக்களை ஊக்கப்படுத்துவதாகவும், அவரது அர்ப்பணிப்பு மதிப்பு மிகுந்தது என்றும் வாழ்த்தியுள்ளார்.

News September 2, 2024

தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

image

DMDK முப்பெரும் விழா பொதுக்கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 14ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். DMDK 20ஆம் ஆண்டு தொடக்க நாள், பத்மபூஷன் விருதுக்காக விஜயகாந்தை கவுரவிக்கும் விழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா ஆகியவை போலீஸ் அனுமதி பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 2, 2024

நிர்வாண போட்டோக்கள் எனக்கு அனுப்பப்படவில்லை: ரேவதி

image

மலையாள இயக்குநர் ரஞ்சித் தன்னை நிர்வாணமாக போட்டோ எடுத்து நடிகை ரேவதிக்கு அனுப்பியதாக நடிகர் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ரேவதி, ஊடகங்களில் வெளியான செய்தியை தானும் பார்த்ததாகவும், அதில் கூறப்பட்டது போல் எந்த புகைப்படங்களும் தனக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து கமெண்ட் செய்வது தேவையில்லாத ஒன்று என கூறியுள்ளார்.

News September 2, 2024

தமிழ் மொழியின் வரலாறு அறிவோம்..

image

*கடை ஏழு வள்ளல்கள்: பேகன்- மயிலுக்கு போர்வை அளித்தவன். *பாரி- முல்லைக்கு தேர் தந்தவன். *காரி- ஈர நன்மொழி கூறியவன். *ஆய்- நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு அணிவித்தவன். *அதியமான்- நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன். *நள்ளி- நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன். *ஓரி- தன் குறும்பொறை நாடு முழுவதையும் யாழ் மீட்டும் பாணர்க்கு அளித்தவன்.

News September 2, 2024

WhatsApp-ஆல் நாட்டுக்கு அச்சுறுத்தல்?

image

வாட்ஸ்அப், டெலிகிராம், கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை நெறிப்படுத்த பயனாளர் பாதுகாப்பு நெறிமுறைகளை வகுக்குமாறு COAI அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. COAI அமைப்பில் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மேற்கூறிய செயலிகள் மூலம் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

News September 2, 2024

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உயர்த்துவோம்

image

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உயர்த்துவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஃபார்முலா 4 கார்பந்தயம் உள்பட பல விளையாட்டு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியதாகவும், இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், அதனால் தான் ஒலிம்பிக் குழுவில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

News September 2, 2024

புத்தர் பொன்மொழிகள்

image

*நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன அல்லது செய்தவற்றின் விளைவாகும். *எப்படி எதிர்வினையாற்றுவது என்று கற்றுக்கொள்ளாதீர்கள். எப்படி பதிலளிப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள். *எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விடயங்களுக்காக கவலைப்பட வேண்டும். *வெளியிலிருந்து நம்மை யாரும் ஆள முடியாது. இந்த உண்மை தெரிந்தவுடன், நாம் சுதந்திரமாகிவிடுகிறோம்.

News September 2, 2024

சமூக வலைதளங்களை பராமரிக்க ₹54 லட்சமா..!

image

சித்தராமையாவின் சமூக வலைதள கணக்குகளை பராமரிக்க, கர்நாடக முதல்வர் அலுவலகம் மாதம் ₹54 லட்சம் செலவிடுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு அக். 25 முதல் 2024 மார்ச் வரையில் ₹3 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த பாஜக ஆட்சியின் போது, இதற்காக மாதம் ₹2 கோடி செலவிடப்பட்டதாகவும், அதை விட தற்போதைய அரசு குறைவாக செலவு செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!