news

News September 2, 2024

Current Affairs: கேள்விகளுக்கு பதிலளியுங்கள்

image

1.இந்தியாவில் உள்ள எந்த கல்வி நிறுவனம் மண்& நீரின் தரத்தை தீர்மானிக்கும் நவீன கையடக்க சாதனத்தை உருவாக்கியது? 2.‘மர்ஃபாடி’ எந்த இனக்குழுவின் பாரம்பரிய நாட்டுப்புற பாடலாகும்? 3.கண்காணிப்பு வானவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 4.நோபல் பரிசு வென்றவர்களுக்கான (2023 ஆம் ஆண்டில்) திருத்தப்பட்ட பரிசுத் தொகை எவ்வளவு? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News September 2, 2024

எல்லா துறைகளிலும் பாலியல் சீண்டல்கள்: சீமான்

image

தமிழ்த் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறித்து சீமானிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “எல்லா துறைகளிலும் பாலியல் சீண்டல் இருக்கிறது. சினிமாவில் நடப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திரையுலகம் என்பதால் அது பளிச்சென தருகிறது. எந்த துறையாக இருந்தாலும் அதை தடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

News September 2, 2024

காளை ஆதிக்கம்… வரலாற்று உச்சத்தில் சந்தை

image

இந்திய பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தில் புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 63 புள்ளிகள் உயர்ந்து, 25,300 புள்ளிகளை முதன்முறையாக கடந்தது. சென்செக்ஸ் பொறுத்தமட்டில் 235 புள்ளிகள் உயர்ந்து, 82,590 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. சற்று ஓய்வுக்கு பின் காளையின் இந்த எழுச்சி முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

News September 2, 2024

சாதனைத் தமிழச்சி: ‘பெண் நம்மாழ்வார்’ INSPIRE ரேவதி

image

சுனாமி பாதித்த இந்தோனேஷியாவின் (7 லட்சம் ஏக்கர்) நிலங்களை பில் கிளிண்டன் விடுத்த வேண்டுகோளின் பெயரில் சீர் செய்து கொடுத்தவர் INSPIRE ரேவதி. காடு, மலை, கடல் எல்லைகளைக் கடந்து பயணப்பட்டு ஆராய்ச்சியும், களப்பணியும் செய்துவருகிறார். அரசுப் பணியைத் துறந்து, கால் நூற்றாண்டு காலமாக வேளாண் நிலம் & விவசாயிகளை காக்க அரசுப் பணியைத் துறந்த பசுமைப் போராளியான அவரை ‘பெண் நம்மாழ்வார்’ என போற்றுகின்றனர்.

News September 2, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை

image

இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய சாத்தியமுள்ளது என்பது குறித்த முன்னறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் நெல்லை, தென்காசி, குமரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News September 2, 2024

6 ஆண்டுகளில் 1,551 பெண்களா.. கலங்கடிக்கும் தகவல்

image

2017-22க்கு இடைப்பட்ட 6 ஆண்டுகளில் 1,551 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சராசரியாக வாரத்திற்கு 5 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு பின் கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உ.பி (280), ம.பி (207), அசாம் (205), மகாராஷ்டிரா (155), கர்நாடகா (79) வழக்குகள் பதிவானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து உங்க கருத்து பதிவிடுங்க.

News September 2, 2024

மாரி செல்வராஜ் சார் கதறி அழுதாரு…

image

மாரி செல்வராஜின் அக்கா கதாபாத்திரத்தில்தான் ‘வாழை’ படத்தில் தான் நடித்ததாக நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், இப்படத்தின் Interval காட்சி எடுக்கும் போது மாரி செல்வராஜ் கதறி அழுததாக கூறினார். இந்த படம் தனது மனதுக்கு நெருக்கமானது என நெகிழ்ச்சி தெரிவித்தார். ‘வாழை’ படத்தை நீங்க பாத்துட்டீங்களா? படம் பிடித்திருந்ததா என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.

News September 2, 2024

JUST NOW: தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைந்தது

image

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ₹200 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக தாெடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் ₹25 குறைந்து, ₹6,670க்கும், 1 சவரன் தங்கம் ₹200 குறைந்து, ₹53,360க்கும் விற்கப்படுகிறது. முன்னதாக, நேற்று 1 கிராம் தங்கம் ₹6,695க்கும், 1 சவரன் தங்கம் ₹53,560க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்க

News September 2, 2024

வங்கதேசம்: கனமழை வெள்ளத்துக்கு 59 பேர் பலி

image

வங்கதேசத்தில் கனமழையால் நேரிட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் 59 பேர் பலியாகினர். கடந்த சில நாள்களாக பெய்யும் தொடர் மழையால் 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த 53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.

News September 2, 2024

தலைமைச் செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை

image

தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, அரசு தரப்பில் முக்கிய உத்தரவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.

error: Content is protected !!