India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கந்தஹார் விமானக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட IC 814 வெப்சீரியஸ் திரைப்படம் சர்ச்சையான நிலையில், அதனை வெளியிட்ட NETFLIX Content Head-ஐ நாளை நேரில் ஆஜராகுமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வெப் சீரியஸில் தீவிரவாதிகள் சிலருக்கு இந்து பெயர்களை சூட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டை நடத்த அனுமதிகோரி மனு அளிக்கப்பட்ட விவகாரத்தில் விஜய்க்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் அவர்கள் அளித்துள்ளனர். மாநாடு நடத்தப்படும் நேரம், முக்கிய பிரமுகர்கள் யார்-யார் கலந்து காெள்ள இருக்கிறார்கள், பெண்கள் எவ்வளவு பேர் பங்கேற்பர் உள்ளிட்டவை குறித்து போலீஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கற்றாழைச் செடி அனைத்து சருமத்திற்கும் ஏற்ற சிறந்த மூலிகையாகும். இதனை ஜெல் போல செய்து முகத்தில் பூசி வர சருமம் ஜொலிக்கும். கற்றாழை செடியை பறித்து நன்றாக அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும் கண்களைத் தவிர பிற பகுதிகளில் திக்காக பேக் போல போடவும். பின்னர் 10-15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் இருமுறை இப்படி செய்தால் உயிரிழந்த செல்கள் உதிர்ந்து, முகம் பொலிவு பெறும்.
நேபாளில் இருந்து டெல்லிக்கு 1999 டிச.24-ம் தேதி வந்து கொண்டிருந்த<<13998644>> Indian Airlines 814<<>> என்ற விமானத்தை பாக். தீவிரவாதிகள் கடத்தி, ஆப்கனின் கந்தஹாருக்கு கொண்டு சென்றனர். இந்திய சிறையில் உள்ள 36 தீவிரவாதிகளை விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், பேச்சுவார்த்தை நடத்திய இந்தியா, 3 தீவிரவாதிகளை மட்டும் விடுவித்தது. முன்னதாக, விமானத்தில் ஒரு பயணியை தீவிரவாதிகள் கொன்றனர்.
தமிழகத்தில் நடப்பாண்டில் டெங்கு பாதித்து 4 பேர் பலியாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் 11,538 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருப்பதாகவும் கூறினார். மேலும் டெங்கு பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆன்லைனில் உணவு பொருட்களை வாங்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், திருச்சி அரியமங்கலத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி, சமைத்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் உடல்நலம் பாதித்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். இதனிடையே, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மலையாள திரையுலகம் குறித்து பேசிய நடிகை ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் எப்போது? எந்த நடிகை பாதிக்கப்பட்டார்? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக அறியமுடிகிறது. முன்னதாக, மலையாள படங்களில் நடிக்கும் நடிகைகள் உடைமாற்றுவதை சிலர் கேரவன்களில் ரகசிய கேமரா பொருத்தி, படம்பிடித்து பார்த்ததாக ராதிகா குற்றஞ்சாட்டியிருந்தார்.
கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை வழங்கி உள்ளன. அதில், WHATSAPP மூலம் முன்பதிவு செய்யும் முறையும் ஒன்று. Indane எனில், அந்த நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் எண்ணில் இருந்து 7588888824 நம்பருக்கு REFILL என்றும், HP எனில் 9222201122 நம்பருக்கும், BHARAT GAS எனில் 1800224344 நம்பருக்கும் BOOK என்று MSG அனுப்பினால் சில நொடிகளில் புக் ஆகிவிடும். SHARE IT
சென்னை பார்முலா 4 கார் ரேஸை அதிமுக மட்டுமே கடுமையாக விமர்சித்த நிலையில், மற்ற எதிர்க்கட்சிகள் விமர்சிக்கவில்லை. போட்டி அறிவிப்பு வெளியானது முதல் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, நீதிமன்றத்திலும் வழக்குத் தாெடுத்தது. ஆனால், தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கும் பாஜக, பாமக, அமமுக போன்ற கட்சிகள் விமர்சனம் முன்வைக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.
1.இந்தியாவில் உள்ள எந்த கல்வி நிறுவனம் மண்& நீரின் தரத்தை தீர்மானிக்கும் நவீன கையடக்க சாதனத்தை உருவாக்கியது? 2.‘மர்ஃபாடி’ எந்த இனக்குழுவின் பாரம்பரிய நாட்டுப்புற பாடலாகும்? 3.கண்காணிப்பு வானவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 4.நோபல் பரிசு வென்றவர்களுக்கான (2023 ஆம் ஆண்டில்) திருத்தப்பட்ட பரிசுத் தொகை எவ்வளவு? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
Sorry, no posts matched your criteria.