news

News September 2, 2024

ஆளுநரை சாடிய சு.வெ

image

சென்னையில் தனியார் பள்ளி விழாவில் பேசிய ஆளுநர் ரவி தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளதாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு சு.வெங்கடேசன் எம்பி தனது Xஇல்“புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு”என சாடியுள்ளார்.

News September 2, 2024

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வமில்லாத மக்கள்

image

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 13% வீழ்ச்சியடைந்து 1,56,199ஆக குறைந்துள்ளது. மின்சார வாகன மானியம் ஜூன் 1ஆம் தேதியில் இருந்து நிறுத்தப்படும் என அரசு அறிவித்ததால் மே மாதம் விற்பனை உயர்ந்தது. ஆனால், மானியம் குறைக்கப்பட்டதை அடுத்து, ஜூன் மாதம் முதல் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

News September 2, 2024

இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த 2 தமிழ் பெண்கள் ❤️❤️

image

பாரிஸ் <<14005599>>பாராலிம்பிக்ஸ் <<>>பேட்மிண்டன் போட்டியில் 2 பதக்கங்களை வென்று கொடுத்து, இந்தியாவுக்கு 2 தமிழச்சிகள் பெருமிதம் சேர்த்துள்ளனர். இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் மனிஷா ராமதாஸ், டென்மார்கை கேத்ரின் ரோசன்கிரெவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம், இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

News September 2, 2024

புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை.. வெளியான தகவல்

image

’புஷ்பா 2’ படத்தை நெட்பிளிக்ஸ் 270 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் அல்லுவின் கேரியலில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட படம் என திரைவட்டாரங்கள் கூறுகின்றன. இந்திய சினிமாவில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட படங்களின் பட்டியலில் கே.ஜி.எஃப் 320 கோடியுடன் முதல் இடத்திலும், புஷ்பா 2, ஜவான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ரஜினியின் ஒரு படம் இந்த லிஸ்டில் உள்ளது எதுனு guess பண்ணுங்க.

News September 2, 2024

கைது செய்யப்பட்டார் சந்தீப் கோஷ்

image

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பயிற்சி மருத்துவரின் கொலை சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 12இல் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 2, 2024

வெள்ளி வென்ற தமிழ் மங்கை

image

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் யாங் கியுசியாவை தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 21-17,21-10 என்ற செட் கணக்கில் அவர் தோல்வி அடைந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. தமிழச்சிக்கு வாழ்த்து சொல்லுங்க.

News September 2, 2024

ஆம்னி பஸ் கட்டணம் உயராது

image

ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்த்தப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனால், ஆம்னி பேருந்துகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சங்க நிர்வாகிகள் வழக்கமான கட்டணமே தொடரும் என தெரிவித்துள்ளனர்.

News September 2, 2024

விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு!

image

விவசாயிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் டிஜிட்டல் வேளாண் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1800 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள விவசாயப் பயிர் நிலங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும். மேலும், ஒவ்வொரு விவசாயிக்கும் தனி அடையாள அட்டை வழங்கப்படும். லாபம் தரும் பயிர்களை நடுவது குறித்து ஆலோசனை அளிக்கப்படும்.

News September 2, 2024

திங்கட்கிழமை பிறந்தவரா நீங்கள்?

image

திங்கட்கிழமை பிறந்தவர்கள் அடக்கமான, அமைதியான, இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். நீங்கள் ரொம்பவே சென்சிட்டிவான நபர் என்பதால், எந்த முடிவையும் சட்டென்று எடுக்க மாட்டீர்கள். குடும்ப உறவுகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். உங்களால் ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது என்கிறார்கள். உங்க குணநலம் சரியா இருக்கானு கமெண்ட்ல சொல்லுங்க.

News September 2, 2024

பிபவ் குமாருக்கு SC பிணை

image

மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிக்கை தாக்கிய விவகாரத்தில், கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. 100 நாட்களுக்கு மேல் பிபவ் குமார் சிறையில் இருப்பதால் ஒருவரை நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என்ற காரணத்தை சொல்லி பிணை வழங்கி உள்ளது. கடந்த விசாரணையின் போது இவரை போன்றவர்களுக்கு பிணை வழங்க முடியாது என SC காட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!