India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*1759 – இலங்கை டச்சு அரசு, கிறிஸ்தவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது. *1958 – தமிழ் மொழி சிறப்பு அமலாக்க சட்டம் இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. *1981 – பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, ஐநாவில் கொண்டு வரப்பட்டது. *1992 – MGR-ஐ வைத்து 17 படங்களை இயக்கிய இயக்குனர் ப. நீலகண்டன் பிறந்த தினம் இன்று.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் (வெள்ளி), மனிஷா ராமதாஸ் ஆகியோர் பதக்கம் வென்றதை நேரில் கண்டு மகிழ்ந்ததாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தனது மகிழ்ச்சியை பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேவேந்திராவுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், வெற்றி பெற்ற இரண்டு வீராங்கனைகளுக்கும் வ்வ்வ்வ்வ்வ்
Flipkart Big Billion Days 2024 விற்பனை, பிளஸ் உறுப்பினர்களுக்காக வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற வாடிக்கையாளருக்கு வரும் 30ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தள்ளுபடி விவரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
▶செப்டம்பர்-3 (ஆவணி 18) ▶செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:45-08:45 AM & 04:45-05:45 PM ▶கெளரி நேரம்: 01:45-02:45 AM & 07:30-08:30 PM ▶இராகு காலம்: 03:00-04:30 AM ▶எமகண்டம்: 09:00-10:30 PM ▶குளிகை: 02:30-01:30 PM ▶திதி: பிரதமை ▶நட்சத்திரம்: மகம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶யோகம்: சித்த, அமிர்த யோகம் ▶சந்திராஷ்டமம்: திருவோணம்.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பேட்மிண்டனில் வெள்ளி வென்ற சுகாஸ் யத்திராஜ், வில்வித்தை குழு போட்டியில் வெண்கலம் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார், வில்வித்தையில் தங்கம் வென்ற சுமித் ஆகியோரை பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். இவர்களின் வெற்றியை கண்டு நாடு பெருமை கொள்வதாக அவர் வாழ்த்தியுள்ளார்.
பா.ஜ.க, ஆளும் மாநிலங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் கட்டடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதால், இதனை எதிர்த்து SCயில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ‘குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா?’ என காவல்துறையை கேள்விக்கேட்ட நீதிபதிகள், ‘புல்டோசர்கள் வைத்து வீடுகளை இடிக்கும் விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரு சட்டம் வகுக்கப்படும்’ எனத் தெரிவித்தனர்.
இன்று (செப்டம்பர் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றார். இது இந்தியா கைப்பற்றியுள்ள 3ஆவது தங்கமாகும். முன்னதாக, டோக்யோ பாரா ஒலிம்பிக்ஸில் சுமித் தங்கம் வென்றிருந்தார். சுமித்தின் முந்தைய சாதனையை அவரே முறியடித்து 70.59மீ தூரம் ஈட்டி எறிந்துள்ளார். மேலும், கலப்பு வில்வித்தை குழு போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆவின் பால் உற்பத்தி நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்படும் பால் கேன்களில் தண்ணீர் கலக்கப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் புகார் எழுந்த நிலையில், ஆவின் நிர்வாகம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. முறைகேடு காரணமாக ஜஸ்டின் ஜான் தேவசகாயத்தின் ஊதியம் நிறுத்தப்பட்டதால், அவர் அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழக வீராங்கனை துளசிமதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், துளசிமதியின் அர்ப்பணிப்பும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது என பாராட்டிய முதல்வர் அவரை நினைத்து தமிழ்நாடு பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.