news

News September 30, 2024

துணை முதல்வர் உதயநிதிக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து

image

துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். “உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கு எனது வாழ்த்துகள். இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்” என நடிகர் சிம்பு வாழ்த்தியுள்ளார். அதே போன்று நடிகர் தனுஷ். நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ் உள்ளிட்டோரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

News September 30, 2024

கார்கேவிடம் மோடி நலம் விசாரிப்பு

image

கார்கே உடல் நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். காஷ்மீரில் தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் தலைவர் கார்கே மயங்கினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் பேசிய அவர், மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரையில் தான் சாக மாட்டேன் எனவும், தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். காஷ்மீரில் இறுதி கட்ட தேர்தல் அக்.1இல் 40 தொகுதிகளில் நடைபெறுகிறது.

News September 30, 2024

அமைச்சர் பதவி என்பது CM தனிப்பட்ட உரிமை: கார்த்தி

image

செந்தில் பாலாஜி அமைச்சராக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிறைக்கு சென்றால் அமைச்சராக கூடாது என்றால், பாஜக அனைவர் மீது வழக்கு போட்டு யாரையுமே அமைச்சராக பதவி ஏற்க விடாமல் செய்துவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒருவரை அமைச்சராக்குவது என்பது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், அதில் வேறு யாரும் தலையிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

News September 30, 2024

மே.வங்கத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது: மம்தா

image

மே.வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை சமாளிக்க மத்திய அரசு உதவவில்லை என அம்மாநில மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவதாகவும், மற்ற நேரத்தில் மே.வங்க மக்களை மறந்து விடுவதாகவும் அவர் விமர்சித்தார். மற்ற மாநிலங்களுக்கு வெள்ளப்பெருக்கிற்கு நிதி வழங்கப்படும் நிலையில், மே.வங்கத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

News September 30, 2024

நிலச்சரிவில் சிக்கி 151 பேர் பலி

image

நேபாள நிலச்சரிவில் சிக்கி 151 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதில் 300 வீடுகள் நீரில் மூழ்கின. மழையைத் தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு நேரிட்டது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News September 30, 2024

செப்டம்பர் 30: வரலாற்றில் இன்று

image

▶1970 – தமிழர் நடிகர் சேத்தன் பிறந்த தினம்
▶1995 – தமிழகத்தில் கரூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
▶2001 – ம.பி அருகே விமான விபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உயிரிழந்தனர்.
▶2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
▶2009 – சுமத்திராவில் 7.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,115 பேர் உயிரிழந்தனர்.

News September 30, 2024

ENG Vs AUS: தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

image

ENG எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் AUS அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ENG 309 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பென் டக்கெட் 107 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய AUS, 20.4 ஓவர்களில் 165/2 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 46 ரன்களில் AUS வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் அந்த அணி கைப்பற்றியது.

News September 30, 2024

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட பரப்புரை நிறைவு

image

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. 90 தொகுதிகளை கொண்ட அங்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்.18இல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 61% வாக்குகள் பதிவானது. 2ஆவது கட்டமாக 26 இடங்களுக்கு செப். 25இல் தேர்தல் நடந்த நிலையில், அதில் 56% வாக்குகள் பதிவாகின. அக்.1இல் 40 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

News September 30, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: மக்கட்பேறு
▶குறள் எண்: 68
▶குறள்:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
▶பொருள்: தம்‌ மக்களின்‌ அறிவுடைமை, தமக்கு இன்பம்‌ பயப்பதைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம்‌ மிகுந்த இன்பம்‌ பயப்பதாகும்‌.

News September 30, 2024

IND Vs BAN T20: வங்கதேச அணி அறிவிப்பு

image

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சாண்டோ தலைமையிலான அந்த அணியில் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், மஹ்மூத் உல்லா, லிட்டன் குமர் தாஸ், ஜேக்கர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் டி20 போட்டி குவாலியரில் அக்.6ஆம் தேதியும், 2ஆவது போட்டி டெல்லியில் 9ஆம் தேதியும், 3ஆவது ஆட்டம் ஹைதராபாத்தில் 12ஆம் தேதியும் நடக்கிறது.

error: Content is protected !!