India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ ஆயுத & பொருளாதார உதவிகளை உலகை பேரழிவுக்கு தள்ளும் வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ➤சீனாவின் 7 போர்க்கப்பல்கள் & 12 விமானங்கள் தங்களது நாட்டின் எல்லைக்குள் கண்டறியப்பட்டதாக தைவான் தெரிவித்துள்ளது. ➤உக்ரைன் அனுப்பிய 125 டிரோன்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. ➤சோமாலியாவில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமாநில கொள்ளையர்கள், தமிழகத்திற்கு கிரிமினல் டூர் வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நாமக்கல் அருகே பிடிப்பட்ட கொள்ளையர்கள் இதுவரை, தமிழகம், கேரளா உள்பட 6 மாநிலங்களில் உள்ள ATMகளில் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து கூறிய போலீசார், கார், கண்டெய்னர் லாரியில் டூர் வருவது போல் வரும் அவர்கள், லாரியிலேயே தங்கி சமைத்து சாப்பிட்டுவிட்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
திருவையாறு சப்தஸ்தானத்தில் தர்ம தலமான திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற தலமாகும். எம தருமனிடம் இருந்து சிறுவனை காத்து அருள்புரிந்த ஈசன் உறைந்த இத்திருத்தலத்திற்கு முதல் பராந்தக சோழன் திருப்பணி செய்துள்ளார். இங்குள்ள ஆபத்சகாயர் – பெரிய நாயகியை விரதமிருந்து அபிஷேகம் செய்து, வில்வம் சாற்றி, விளக்கேற்றி, தேவாரம் பாடி வணங்கினால் கல்வி & கலை ஆற்றல் பெருகும் என்பது ஐதீகம்.
தனது எதிரிகளை ஒட்டுமொத்தமாக தீர்த்துக்கட்டும் முடிவில் இஸ்ரேல் இருப்பதாக தெரிகிறது. முதலில் பாலஸ்தீனத்தின் காஸாவையும், பின்னர் லெபனானையும் ரத்தக் களறியாக்கிய இஸ்ரேல், நேற்று இரவு முதல் ஏமனையும் தனது தாக்குதல் வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. ஹவுத்தி கிளர்ச்சி படையினரை குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழி தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் BIS நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட 390 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். உதவி இயக்குநர், தனி செயலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி கடந்த 9ம் தேதி தொடங்கியது. இன்று நள்ளிரவு வரை இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
ரயில்வே, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு, கல்வி டிவியில் இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இதில், டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு அக்.4 வரை காலை 7-9 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. மறுஒளிபரப்பு அன்றிரவு 7-இரவு 9 மணி வரை ஒளிபரப்பப்படும். SHARE IT.
ஹரியானா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவினர் 8 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அக்.5ஆம் தேதி அங்கு 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக MLA தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் Ex மந்திரி ரஞ்சித் செளதாலா உள்பட 8 பேர் தனித்து போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இதனால் அவர்களை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்வதாக பாஜக அறிவித்துள்ளது.
துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி முதல் பயணமாக இன்று மதுரை செல்லவுள்ளார். நாளை மதுரையில் பல்வேறு நலத்திட்ட தொடக்க விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து விருதுநகரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இளைஞரணி செயலாளராக கடந்த 2019இல் அவர் பொறுப்பேற்ற பிறகு, மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதேபோல், தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனக் கூறியுள்ளது.
தேர்தல் பத்திரம் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளதால் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று CONG வலியுறுத்தி உள்ளது. சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் குற்றவாளி என்பதால் நிதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.