news

News September 3, 2024

நிவின் பாலி மீது பரபரப்பு பாலியல் புகார்

image

பாலியல் புகாரில் நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படவாய்ப்பு தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வைத்து தன்னை வன்கொடுமை செய்ததாக கேரள நடிகை புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அது கேரள திரைத்துறையில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

News September 3, 2024

2.5 லட்சம் தொலைபேசி எண்களை முடக்கிய TRAI

image

SPAM அழைப்புகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் 2.75 லட்சம் தொலைபேசி எண்களை முடக்க, நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 7.9 லட்சம் புகார்கள் வந்துள்ளதாகவும், பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து வரும் விளம்பர அழைப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.

News September 3, 2024

BREAKING: அறிவித்தது TNPSC

image

குரூப் 4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாகும் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

News September 3, 2024

மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

டாஸ்மாக் கடைகளிலும் பில்லிங் மிஷின் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக மது பிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மிஷன் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், டாஸ்மாக் கணக்குகளை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இனி எந்த கடைகளிலும் கூடுதலாக பணம் வாங்க முடியாது என்றார்.

News September 3, 2024

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய வங்கதேசம்

image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேச அணி 4வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றதன் மூலம் இங்கிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியது. புள்ளிப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்திலும்,2. AUS,3.NZ,5.ENG,6-SA 7-SL, 8-PAK 9-WI

News September 3, 2024

மனைவியின் பிறந்தநாளை மறந்தால் சிறை

image

உலகில் சில நாடுகளில் உள்ள வித்தியாசமான சட்டங்களை தெரிந்துகொள்வோம். ஆஸ்திரேலியா அருகில் உள்ள சமோவா தீவில் மனைவியின் பிறந்த நாளை மறந்தால் அபராதம்/சிறை தண்டனையாம்.
ஸ்காட்லாண்டில் இயற்கை உபாதைகளைக் கழிக்க எந்த வீட்டு கதவைத் தட்டி வேண்டுமானாலும் கழிவறையைப் பயன்படுத்தலாம். பொதுவெளியில் கழிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். உங்களுக்கு தெரிந்த வித்தியாசமான சட்டங்களை கமெண்ட் பண்ணுங்க.

News September 3, 2024

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர்

image

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கேட்டார். பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி ஷோபா பேசியிருந்தார். இதுதொடர்பான புகாரில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ளார்.

News September 3, 2024

பேராபத்து: ஓநாய்களாக மாறும் நாய்கள்..!

image

உ.பி.யில் ஓநாய்களின் மனித வேட்டைக்கு பின் பேராபத்து மறைந்திருக்கிறது. பரைச் மாவட்டத்திற்கு அருகே உள்ள வனம், மனித ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது. இதனால் ஓநாய்கள் நீர் தேடி ஊருக்கு வரும்போது, நாய்களுடன் கூடுகின்றன. இதில் பிறக்கும் ஓநாய் கலப்பின நாய்களுக்கு, மனிதர்கள் மீது அச்சம் இருப்பதில்லை. எனவே ஓநாய்களும், கலப்பு நாய்களுமே இந்த வேட்டையில் இறங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

News September 3, 2024

ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்

image

கோட் திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். திரையரங்கிற்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், கோட் திரைப்படத்தை கொண்டாட வேண்டும். அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால், ரசிகர்களும், தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்துள்ளார்.

News September 3, 2024

கமல்ஹாசனை இயக்கும் அட்லீ

image

தமிழில் பிஸியாக இருந்த இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அட்லீ இயக்கிய முதல் பாலிவுட் படமே ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், அட்லீ இயக்கவுள்ள புதிய படத்தில் கமல் மற்றும் சல்மான் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்தப்படம் 2025 ஜனவரியில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!