news

News September 30, 2024

கமல் – சல்மான் கூட்டணியில் உருவாகவுள்ள அட்லி படம்

image

பாலிவுட்டில் கமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் இயக்குநர் அட்லி புதிய திரைப்படமொன்றை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதை விவாதத்தில் அவர் ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ள இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 30, 2024

லட்டு விவகாரம்: மதியம் 1 மணிக்கு SC விசாரணை

image

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இன்று மதியம் 1 மணிக்கு சுப்ரீம் கோர்ட் (SC) விசாரணை நடத்தவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரி ஏராளமான மனுக்கள், SCஇல் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இன்று மதியம் 1 மணிக்கு SC விசாரிக்கவுள்ளது.

News September 30, 2024

மேற்கு வங்கத்திற்கு உதவாத மத்திய அரசு: மம்தா

image

மே. வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதினால், அவருடைய அமைச்சர்கள் எவரேனும் பதிலளிப்பதாகக் கூறிய அவர், கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மே. வங்கத்திற்கு மட்டுமே பேரிடர் காலத்திற்கான வெள்ள மானியங்கள் வழங்கப்படவில்லை என்று சாடியுள்ளார்.

News September 30, 2024

GOOD NEWS: ஜியோ மீண்டும் அசத்தல்

image

3 மலிவு விலை திட்டங்களை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ₹51, ₹101, ₹151 விலையில் 3 திட்டங்களை ஜியோ களமிறக்கியுள்ளது. இதற்கு ஏற்கெனவே ஆக்டிவ்வில் உள்ள பிளானுடன் சேர்த்து இந்த கட்டணத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ₹51க்கு ஒரு மாத வேலிடிட்டியுடன் 4G, 5G டேட்டா 3 GB கிடைக்கும். ₹101 ரீசார்ஜ் செய்தால் 6 GB 5G டேட்டாவும், ₹151 ரீசார்ஜ் செய்தால் 9 GB 4G, 5G டேட்டாவும் கிடைக்கும்.

News September 30, 2024

IND Vs BAN: லஞ்ச் பிரேக் வரை 205/6

image

இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உ.பி., கான்பூரில் நடைபெறும் முதல் இன்னிங்சின் 4வது நாள் ஆட்டத்தில் BAN 205/6 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மொமினுல் 102*, நஜ்முல் 31 ரன்கள் எடுத்துள்ளனர். IND தரப்பில், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2, பும்ரா, சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். மழை காரணமாக 2, 3ஆம் நாள் ஆட்டம் தடைபட்டது.

News September 30, 2024

அவர் தியாகி என்றால் இவர்கள் துரோகிகளா?

image

செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய CM ஸ்டாலின், SBக்கு வழக்கறிஞராக இருக்கக் கூடாது என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை, முதல்வர் பாதுகாப்பதை ஏற்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

News September 30, 2024

கற்பனையில் கூட நினைக்கலை.. மிதுன் நெகிழ்ச்சி

image

தாதா சாகேப் பால்கே விருது தனக்கு அறிவிக்கப்படும் என கற்பனையில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று <<14231187>>மிதுன் <<>>சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கலைத்துறையினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த மிதுன், பேச வார்த்தையே இல்லை என்றும், இந்த விருதை தனது குடும்பத்தினர்களுக்கும், ரசிகர்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

News September 30, 2024

தலைமுறை கடந்து போற்றப்படும் கலைஞர்: PM

image

தாதா சாகேப் பால்கே விருது பெறும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு, PM மோடி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான X பதிவில், ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து அவருக்கு மதிப்புமிக்க விருது வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மிதுன் ஒரு கலாசார சின்னம், அவரது பல்துறை நடிப்பிற்காக தலைமுறைகள் கடந்தும் போற்றப்படுகிறார் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

BREAKING: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சி

image

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து தற்போது சென்செக்ஸ் 85,556 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 280 சரிந்து 25,896 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் சரிவுடன் வர்த்தமாகின்றன.

News September 30, 2024

பிஎஃப் கணக்கு: நாளை முதல் புதிய விதிகள் அமல்

image

நாளை (அக்டோபர் 1) முதல் பிஎஃப் கணக்கு தொடர்பான 3 புதிய முக்கிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. அதை தெரிந்து கொள்வோம். 1) என்ஆர்ஐ யாரேனும் பிஎஃப் கணக்கில் தகவலை அப்டேட் செய்யாமல் இருந்தால், அதற்கு நாளை முதல் வட்டி செலுத்தப்படாது. 2) பிஎஃப் கணக்கு ஒன்றுக்கும் மேல் இருப்பின், நாளை முதல் மெயின் கணக்கிற்கே வட்டி வரவு வைக்கப்படும். 3) 18 வயதுக்கு மேற்பட்டோர் கணக்கிலேயே வட்டி வரவு வைக்கப்படும்.

error: Content is protected !!