news

News September 4, 2024

மணவாழ்வு சிறக்க செய்யும் லட்சுமி நாராயணன்

image

ஆந்திராவின் வேப்பஞ்சேரியில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோயில் 3ஆம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. மகாலட்சுமியை மடி மீது அமர வைத்த நிலையில் காட்சி தரும் லட்சுமி நாராயணனை தரிசிக்க தவம் செய்திருக்க வேண்டும் என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். இவரை தரிசித்தால் நல்ல மணவாழ்வு அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சித்தூரில் இருந்து 15 KM தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.

News September 4, 2024

விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது

image

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதன்படி, விழுப்புரம், சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. சென்னையிலும் சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

News September 4, 2024

நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள்: பத்மபிரியா

image

மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும், முதுகெலும்பும் இல்லை என நடிகை பத்மபிரியா விமர்சித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஹேமா கமிட்டி அறிக்கையை மறைத்து வைத்தது ஏன் எனவும், கூண்டோடு ராஜினாமா செய்து நடிகர்கள் சங்கத்தினர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தனக்கு மலையாளத்தில் திடீரென வாய்ப்புகள் குறைந்ததற்கான காரணம் தனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.

News September 4, 2024

விரைவில் தமிழில் பேசுவேன்: R.N.ரவி

image

தமிழை தன்னால் வாசிக்க முடியும், ஆனால் பேசுவதுதான் மிகவும் சிரமமாக உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக ஒருநாள் நீண்ட நாள் ஆசையான தமிழில் பேசுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்த தேசத்தை சிலர் இனம், மதம், மொழியின் பெயரால் துண்டாட நினைப்பதாகவும், இத்தகைய பிரிவினைவாத போக்குக்கு மாணவர்கள் பலியாகிவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News September 4, 2024

மதுவே முதன்மைக் காரணம்: சீமான்

image

காவல்துறை உயரதிகாரி தாக்கப்படுமளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட அரசு விற்கும் மதுவே முதன்மைக் காரணம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மதுபோதையில் இருந்ததே இக்கொடுந்தாக்குதலுக்கு முக்கிய காரணம் எனவும், திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில், பெண் காவல் அதிகாரியே தாக்கப்படும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News September 4, 2024

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு

image

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது. பி.டெக் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 597 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

News September 4, 2024

தலைமை அலுவலகத்தை விற்க நினைக்கும் Cognizant

image

சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 15 ஏக்கர் நிலத்தில் 4 லட்சம் சதுர அடியில் உள்ள தலைமை அலுவலகத்தை டிசம்பருக்குள் விற்க Cognizant நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மதிப்பு ₹750 கோடி முதல் ₹800 கோடி வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் தலைமை அலுவலகமாக இது செயல்பட்டு வந்தது. புதிய தலைமை அலுவலகம் தாம்பரம் அருகில் உள்ள MEPZ வளாகத்தில் இயங்கும் என கூறப்படுகிறது

News September 4, 2024

முதல் திருமணம் வலி நிறைந்த ஒன்று: கமல்

image

வானி கணபதியுடனான முதல் திருமணம் முறிந்தது வலி நிறைந்த ஒன்றாக மாறியதாக கமல்ஹாசன் மனம் திறந்து பேசியுள்ளார். திருமணம் ஆன முதல் நாளே இது தனக்கு செட் ஆகுமா என சந்தேகம் இருந்ததாகவும், தான் பொய் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்து காரணமாக திருமண உறவின் மீது நம்பிக்கை சிதைந்ததாகவும், கூறியுள்ளார். 2ஆவது மனைவி சாரிகாவுடனான அவரது நெருக்கமே, விவாகரத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

News September 4, 2024

நம்ம தமிழ் பெருமை: தினம் 3

image

*இயல், இசை, நாடகம் குறித்து கூறிய முதல் நூல்- பிங்கலம். *இயற்பா, இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல்- நாலாயிர திவ்ய பிரபந்தம். *இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர்கள் எண்ணிக்கை-470. *ரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர்- படிக்காசுப் புலவர். *இரட்சணிய குறள் எழுதியவர்- எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை. *உரை நூல்களுள் பழமையானது- இரையனார் அகப்பொருள் உரை. *அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்- வே.ராசகோபால்.

News September 4, 2024

₹1.45 லட்சம் கோடியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள்

image

இந்திய ராணுவத்திற்கு ₹1.45 லட்சம் கோடியில் உபகரணங்கள், தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 99% Buy India, Make India கொள்கையில் வாங்கப்பட உள்ளது. அதிநவீன பாதுகாப்பு அம்சம் கொண்ட டேங்கர்கள், கடற்படைக்காக அடுத்த தலைமுறை கண்காணிப்பு விமானமான Dornier-228, வான் தாக்குதலுக்கான Air Defence Fire Control உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!