India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு பேருந்துகளில் பெண்கள் 520 கோடி இலவச பயணங்களை மேற்கொண்டு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவசப் பட்டாக்களை வழங்கி அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் அரசின் திட்டத்தால் பெண்கள் பெரும் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டார். நீங்கள் இலவச பயணம் செய்துள்ளீர்களா ?
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரும், வில்லன் நடிகருமான மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர், கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை தயாரித்துள்ளார். கிழக்குகரை, மகாநதி, சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கந்தஹார் விமானக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான IC 814 வெப் சீரியஸில் தீவிரவாதிகளுக்கு இந்து பெயர் சூட்டப்பட்டது சர்ச்சையானது. இதுதொடர்பாக NETFLIX அதிகாரி வருத்தமும் தெரிவித்தார். ஆனால், விமானக் கடத்தலின் போது, நிஜ தீவிரவாதிகளுக்கு போலா, சங்கர் என்ற Codename-ம், மற்ற 3 தீவிரவாதிகளுக்கு Chief, Doctor, Burgar என்ற Codename-ம் இருந்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
OLED திரைகள் LCD திரையை காட்டிலும் அதிக வாழ்நாள் உழைக்கும். இதற்கு குறைவான Maintenance போதுமானது. அதிக செயல்திறன் கொண்டிருக்கும். அதிக வெப்பத்தை வெளியிடாது. LCD திரைகளோடு ஒப்பிடும்போது நிறங்களை சிறப்பாக வேறுபடுத்தி காட்டுகிறது. அதே நேரம், LCDஐ விட விலை உயர்ந்தது. மேலும், இதன் இயக்கத்திற்கு அதிகமான Power தேவைப்படுகிறது. Apple அதன் ஐபோன்களில் இனி OLED திரைகளை பொருத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவில்லை எனில், மறுசீரமைப்பு திட்டத்திற்கான மானியம் வழங்கப்படாது என தமிழக அரசை மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த மறுசீரமைப்பு திட்டத்திற்காக மத்திய அரசு ₹6,360 கோடி கடன் வழங்குகிறது. இந்த நிதியாண்டிற்குள் இப்பணிகளை முடித்துவிட்டால், மத்திய அரசின் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. அக்கடன் மானியமாகி விடும். இல்லையெனில் வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும்.
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.85மீ உயரம் தாண்டி அவர் அசத்தியுள்ளார். இதன்மூலம், 2016ல் தங்கம், 2020ல் வெள்ளி, 2024ல் வெண்கலம் என பாராலிம்பிக்ஸில் தொடர்ந்து, 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் தயாரிப்புகளில் LCDக்கு பதில் OLED டிஸ்ப்ளேக்களை 2025க்குள் படிப்படியாக மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்நிறுவனத்திற்கு LCD டிஸ்ப்ளே சப்ளை செய்து வந்த Sharp Corp, Japan Display ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்பட உள்ளன. OLED திரைக்கான ஆர்டர்கள் சீனாவின் BOE Technology, கொரியாவின் LG Display ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வட்டாட்சியர் பதவி உயர்வு முறையில் சமூக அநீதி நிலவுவதாக PMK தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் பதவி உயர்வு விதிகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டு இருப்பதாக அவர் சாடியுள்ளார். இதில் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையரும் தலையிட்டு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறைக்கு இனி வரும் நாள்களில் ‘களஞ்சியம்’ செயலி மூலமே விண்ணப்பிக்க வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை ஊழியர்களும் செப்.1ம் தேதி முதல் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் இந்த செயலி வாயிலாக மட்டுமே அனுமதி பெற முடியும். அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை விடுப்பு எடுத்தவர்கள் விவரங்களையும் இதில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் மீன்பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக கூறி அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், இவர்களில் 12 மீனவர்களுக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்ட தவறினால் 6 மாதம் சிறைத்தண்டனை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.