news

News September 4, 2024

ராசி பலன்கள் (05.9.2024)

image

*மேஷம் – இன்பம் உண்டாகும் *ரிஷபம் – சுகமான நாளாக அமையும் *மிதுனம் – ஆக்கத்துடன் செயல்படுங்கள் *கடகம் – வீண் செலவு ஏற்படும் *சிம்மம் – போட்டி உண்டாகும் *கன்னி – உதவி கிடைக்கும் *துலாம் – வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் *விருச்சிகம் – நல்லது நடக்கும் *தனுசு – வெற்றி உண்டாகும் *மகரம் – அச்சம் கொள்ள வேண்டாம் *கும்பம் – ஏமாற்றம் கிடைக்கும் *மீனம் – கவலை உண்டாகும்.

News September 4, 2024

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹர்விந்தர் சிங்

image

பாரலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் ஈரான் வீரரை 7-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, கலப்பு இரட்டையர் பிரிவில் ஷீதல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஜோடி வெண்கலம் வென்றனர். இந்தியா இதுவரை 21 பதக்கங்களை வென்றுள்ளது.

News September 4, 2024

சென்னையில் சைக்கிள் ஓட்ட முடியுமா? அன்புமணி

image

சென்னையில் சைக்கிள் பாதை எங்கே உள்ளது? என முதல்வருக்கு, அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி சென்னையில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் சைக்கிள்களையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்”? என Xஇல் வினவியுள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிய வீடியோவை முதல்வர் இன்று பதிவிட்டு இருந்தார்.

News September 4, 2024

அஜித்துடன் விஜய்.. செம வைரல் போட்டோ

image

விஜய்யுடன் நடிகர் அஜித் பைக்கில் அமர்ந்திருப்பது போல், எடிட் செய்து தரும் AI இணையதளத்தை ‘GOAT’ பட தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதேபோன்று, விஜய்யுடன் நீங்கள் இருப்பது போன்ற புகைப்படம் வேண்டுமா?. https://agsentertainment.heyareweare.com என்ற இணையதளத்திற்கு சென்று உங்களின் புகைப்படத்தை மாற்றிக் கொள்ளலாம். தற்போது விஜய் ரசிகர்கள் பலர் AI போட்டோவை மாற்றி வருகின்றனர்.

News September 4, 2024

பயங்கரவாதிகள் தாக்குதலில் 81 பேர் பலி

image

நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள கிராமத்தினரை குறிவைத்து போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய ஆயுதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

News September 4, 2024

67 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

image

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் அக்.1இல் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-காங்கிரஸ் இடையே அங்கு நேரடி போட்டி நிலவி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 2 கட்சிகளும் தலா 5 தொகுதிகளில் வென்றது. தற்போது அங்கு நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

News September 4, 2024

BREAKING: செப்.17ஆம் தேதி பொதுவிடுமுறை

image

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான “மிலாது நபி” செப்.17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இன்று மாலை சென்னையிலும், இதர மாவட்டங்களிலும் பிறை தென்படவில்லை. இதனால், செப்.6ஆம் தேதி முதல் பிறை என்று ஷ்ரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, 17ஆம் தேதி (செவ்வாய்கிழமை) மிலாது நபி கொண்டாடப்படும் என்பதால், அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2024

தொல்லியல் துறையின் இயக்குநராகும் அமர்நாத்

image

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இவர்தான், உலகத்தின் கவனத்தை ஈர்த்த கீழடி அகழாய்வின் மூலம் தொல்தமிழரின் (5,000 ஆண்டுகள் பழமையான) நகர நாகரிகத்தை வெளியுலகிற்கு முதன்முதலில் எடுத்துக்கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 4, 2024

விடியா திமுக அரசால் சீரழியும் மாணவர்கள்: EPS

image

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க திமுக அரசு தவறியதால், தமிழக மாணவர்களின் வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாணவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி, மன அழுத்தத்தில் தவறான முடிவெடுத்தது வேதனை அளிப்பதாகக் கூறிய அவர், இனியாவது விடியா திமுக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து, போதைப்பொருளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News September 4, 2024

BREAKING: பள்ளி மாணவர்களே இதை செய்ய வேண்டாம்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு <<14019884>>பள்ளிகளில் <<>>உறுதிமொழி எடுக்க வேண்டும் என வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. “பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது. எனவே, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டாம். தவறான சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை பாயும்” என்றும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!