India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேஜர் வெடிப்பு சம்பவத்தில் இஸ்ரேல் ராணுவத்தை இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி புகழ்ந்துள்ளார். இதுபோன்ற துல்லிய தாக்குதலுக்கு இஸ்ரேல் பல ஆண்டுகளாக தயாராகி வருவதாகவும், வெடிக்கும் பேஜர்களை தயாரிக்க இஸ்ரேலின் உளவு அமைப்பு பொய் நிறுவனத்தை உருவாக்கியது அசத்தல் நடவடிக்கை என்றும் அவர் பாராட்டியுள்ளார். பேஜர்கள், வாக்கி டாக்கி வெடித்ததில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர்.
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பல சாதனைகளை படைத்து வருவதாகவும், அவர்களை கெளரவிக்கும் வகையில் முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு கோரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தார் என்று திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், செந்தில் பாலாஜியை பாஜகவில் சேர்த்து திமுகவுக்கு எதிராக அவரை களமாட வைக்க சிலர் நினைத்ததாக குற்றம்சாட்டினார். ஆனால், பாஜகவுக்கு அஞ்சாமல் இருந்த மன உறுதிதான் அவரின் தியாகம் என்றும் அவர் கூறினார்.
வார்த்தைகள் தடுமாறினாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள். அனுபவங்களின் அமுதசுரபியான அவர்களின் நலன் & சமூக பாதுகாப்பை உறுதிசெய்ய சர்வதேச மூத்தோர் தினம் (அக்.,1) இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முதியோர்களுக்கும் இன்று வாழ்த்துகள் கூறி அவர்களிடம் ஆசி பெறுவோம். அத்துடன் ‘முதியோர் இல்லங்கள்’ என்பதை அடுத்த தலைமுறைக்கு காட்ட முடியாத சூழலை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்.
‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து TTF வாசன் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். TTF வாசனுடன் இணைந்து பயணிக்க விரும்பியதாகவும், ஆனால் சூழ்நிலை ஒத்துவரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், புதிய கதாநாயகன் அக்.15ஆம் தேதி அறிவிக்கப்படுவார் எனவும், படத்தில் இல்லை என்றாலும் தம்பி TTF உடனான உறவு தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநில நதிநீர் விவகாரத்தில் மக்களை குழப்பும் முயற்சியில் அதிமுக ஈடுபடுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் லாபம் கருதி வெற்று அறிக்கைகள், போராட்டங்களை அதிமுக அறிவிப்பதாகவும், எதிர்க்கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கவில்லை என அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு RMC கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் RMC கூறியுள்ளது. நாளை தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், 3ஆம் தேதி 18 மாவட்டங்களிலும், 4, 5 ஆகிய தேதிகளில் 16 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. SHARE IT
தமிழகத்தில் 52 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதியளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தத் தகவலை காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, 4ஆம் தேதி அணிவகுப்பு நடத்த காவல்துறையிடம் RSS அனுமதி கோரியிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் RSS வழக்குத் தொடுத்திருந்தது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் அரசு, தனியார் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை ஆகும். நாளை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. இதேபோல், அக்டோபர் 10 மஹா சப்தமி அரசு விடுமுறை. இது தவிர, அக்டோபர் 12 மாதத்தின் 2ஆவது சனிக்கிழமை, அக்டோபர் 26 நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை ஆகும். மேலும் மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை ஆகும். இந்த நாள்களில் வழக்கமான வங்கி அலுவல்கள் இருக்காது. SHARE IT
பெருங்குடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் துத்திக்கு இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அபுடிலின் ஏ, அடினைன், ஸ்கோபோலெடின், ஸ்கோபரோன் போன்ற தாவர வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் இலை & பூக்களை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டால் மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு, ஆசனவாய் எரிச்சல், வலி, மலச்சிக்கல் குணமாகுமென சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.