news

News September 5, 2024

மருத்துவக் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி குறைப்பு?

image

மருத்துவக் காப்பீட்டுக்கான GST வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு தற்போது 18% GST வரி விதிக்கப்படுகிறது. இதை குறைக்க அல்லது நீக்கம் செய்ய பிட்மென்ட் குழு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த கோரிக்கை தொடர்பாக செப்.9இல் நடக்கும் GST கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. வரி ரத்து செய்யப்பட்டால் அரசுக்கு ஆண்டுக்கு ₹3,500 கோடி இழப்பு ஏற்படும்.

News September 5, 2024

BJPயில் இணைந்த ‘தளபதி ஜடேஜா’

image

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜடேஜா, பாஜகவில் இணைந்ததாக தேசிய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான உறுப்பினர் அட்டை, அவரது மனைவி ரிவாபா பெயரிலான X தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், உறுப்பினர் பெயர், மாநிலம், மெம்பர்ஷிப் நம்பர் ஆகியவை ஜடேஜா பெயரில் உள்ளது. இந்த தகவல் தற்போது வைரலாகியுள்ளது. IPLஇல் CSK அணிக்காக விளையாடும் அவரை, தளபதி என ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

News September 5, 2024

சென்னை மாநகராட்சியில் 150 பணியிடங்கள்

image

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 150 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்.6) கடைசி நாளாகும். இதில், மருத்துவ அதிகாரி (30 இடங்கள்), செவிலியர் (32), சுகாதார ஆய்வாளர் (12), உதவிப்பணியாளர் (66) உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. இதற்கு https://chennaicorporation.gov.in/gcc/என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து நாளை மாலைக்குள் ரிப்பன் மாளிகையில் சமர்ப்பிக்க வேண்டும்.

News September 5, 2024

இந்த மாவட்டங்களில் மழை உறுதி…

image

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அலுவலகத்தில் இருந்து செல்வோர், வயதானவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியில் செல்வோர் குடையை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்.

News September 5, 2024

அமைச்சர் ஷோபா மீதான அவதூறு வழக்கு ரத்து

image

மத்திய இணையமைச்சர் ஷோபா மீதான அவதூறு வழக்கு ரத்தானது. பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்புக்கு தமிழர்கள் காரணம் என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது பேச்சுக்கு எதிராக 4 பிரிவுகளில் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை HC-இல் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, அவர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரியதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

News September 5, 2024

பாராலிம்பிக்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிம்ரன்

image

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 100 மீட்டர் (T12) பிரிவில் பங்கேற்ற அவர், 12.33 நொடிகளில் இலக்கை அடைந்ததுடன், 2வது இடத்தையும் பிடித்தார். முன்னதாக, அரையிறுதிக்கான போட்டியில், 100 மீ. தூரத்தை அவர் 12.17 நொடிகளில் கடந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியைச் சேர்ந்த சிம்ரன், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் பங்கேற்றுள்ளார்.

News September 5, 2024

SETC பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது

image

தீபாவளி பண்டிகைக்கான SETC முன்பதிவு தொடங்கியுள்ளதாக, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பணிபுரிவோர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல, இன்று முதல் <>இந்த<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது தவிர தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT NOW.

News September 5, 2024

மூலிகை: சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் சிறுபீளை

image

சிறுநீரகக் கற்களால் ஏற்படும் நீரடைப்பு, சிறுநீர் எரிச்சலைப் போக்கும் ஆற்றல் சிறுபீளைக்கு இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது. டிரைடெர்பீன், ஏர்வோஸைடு, வனிலிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் முழு செடியுடன் நீர்முள்ளி, நெருஞ்சில் ஆகியவற்றை நீரில் கலந்து, நன்கு கொதிக்க வைத்து, 48 நாட்கள் குடிநீராக பருகிவந்தால், யூரியா & கிரியேட்டினின் அளவு குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News September 5, 2024

உயிருக்குப் போராடும் கிரிக்கெட் வீரர்

image

அயர்லாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் சிமி சிங் உயிருக்கு போராடுகிறார். கல்லீரல் செயலிழந்ததால் உடல்நிலை மோசமாகி அவர் குர்கான் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மொகாலியை சேர்ந்த இவர், பஞ்சாபுக்காக U-14, U-17 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் அயர்லாந்துக்காக 35 ODI, 53 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

News September 5, 2024

ஜெயிலில் எப்படி என்கவுண்ட்டர் செய்ய முடியும்?

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ரவுடி திருவேங்கடத்தை போல, தனது கணவரையும் போலீசார் என்கவுண்ட்டர் செய்யக்கூடும் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறையில் பாதுகாப்பாக இருக்கும் நாகேந்திரனை எதன் அடிப்படையில் என்கவுண்ட்டர் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர்.

error: Content is protected !!