news

News September 6, 2024

இன்றே கடைசி: மத்திய அரசில் வேலை

image

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் COAL MINES PROVIDENT FUND நிறுவனத்தில் காலியாகவுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.6) கடைசி நாளாகும். ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் (10 இடங்கள்), சோஷியல் செக்யூரிட்டி உதவியாளர் (126) பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதற்கு CMPFO ஆள்சேர்ப்பு இணையதளத்தின் https://cmpfo.gov.in/இல் விண்ணப்பிக்கலாம்.

News September 6, 2024

MBBS பாடத் திட்ட வழிகாட்டுதல் வாபஸ்

image

MBBS பாடத் திட்ட வழிகாட்டுதலை தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. போட்டியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த வழிகாட்டுதல்களுக்கு 3ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதின. இதன் எதிரொலியாக, அந்த வழிகாட்டுதலை திரும்ப பெறுவதாகவும், உடனடியாக ரத்து செய்வதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

News September 6, 2024

6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், நாளை முதல் 11ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

News September 6, 2024

தினமும் 1 கிராம்பு போதும்.. இந்த பிரச்னை எல்லாம் காலி

image

கிராம்பில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன. இதில் காணப்படும் Eugenol என்ற கலவை இயற்கையான அனெஸ்தட்டிக்காக செயல்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு கிராம்பை மென்று சாப்பிட்டால் பல்வலி, ஈறு, வாய் புண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். வைட்டமின் சி மற்றும் Eugenol போன்ற சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் இருப்பதால் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

News September 6, 2024

ராணுவம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

image

இந்தியா அமைதியை விரும்பும் நாடு எனவும், ஆனால் அந்த அமைதியை நிலைநாட்ட, ராணுவம் எப்போதும் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் போர்களை சுட்டிக்காட்டி எதிர்கால சவால்களை முன் கூட்டியே அறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பாரம்பரிய மற்றும் நவீன போர் தந்திரங்களை அறிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

News September 6, 2024

வேண்டுமென்றே திரித்து கூறிவிட்டனர்: K.N.நேரு

image

கூட்டணி குறித்து தான் பேசியதை சிலர் வேண்டுமென்றே திரித்து கூறிவிட்டதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் ஆட்சியை அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், கூட்டணியை யாரும் விட்டுக் கொடுத்து போக வேண்டிய அவசியமில்லை என தான் பேசியதை சிலர் தவறாக திரித்து பேசி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தங்கள் கூட்டணி அருமையான கூட்டணி எனவும் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

நம்ம தமிழ் பெருமை: தினம் 4

image

*பழங்களின் தமிழ் பெயர்கள்: ஆப்பிள்- குமளிப்பழம். *செர்ரி- சேலாப்பழம். *கிவி- பசலிப்பழம். *லிச்சி- விளச்சிப்பழம். *ஆரஞ்சு- கமலாப்பழம். *மெலன்- வெள்ளரிப்பழம். *பீச்- குழிப்பேரி. *ஸ்டிராபெர்ரி- செம்புற்றுப்பழம். *வுட் ஆப்பிள்- விளாம்பழம். *ராஸ்பெர்ரி- புற்றுப்பழம். *மல்பெர்ரி- முசுக்கட்டைப்பழம். *பைனாப்பிள்- செந்தாழை. *வாட்டர்மெலன்- குமட்டிப்பழம். *டுரியான்- முள்நாரி.

News September 6, 2024

பள்ளி சமையலறையில் மலம் தடவியது ஏன்?

image

பள்ளி சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன் முன்விரோதம் இருந்ததால், சத்துணவு மைய கதவில் மனித கழிவை பூசியதாக கைது செய்யப்பட்ட துரைமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியில் கடந்த 2ஆம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவமா என இபிஎஸ் உள்பட பல தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

News September 6, 2024

கச்சத்தீவை மீட்பது தான் தீர்வு: துரை வைகோ

image

கச்சத்தீவை மீட்டால் தான் மீனவர்கள் பிரச்னையில் தீர்வு கிடைக்கும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் மீனவர்கள் மீதான தாக்குதலின் வீரியம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 8 மாதங்களில் 320-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கச்சத்தீவை இலங்கை ஒருபோதும் திருப்பி தராது என தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

செப்டம்பர் 6: வரலாற்றில் இன்று

image

*1965 – பாக்.-ஐ தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக இந்தியா அறிவித்தது. *1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது, இலங்கையின் குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. *1997 – இளவரசி டயானாவின் உடல் லண்டனில் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வை, 25 லட்சம் மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர். *1998 – உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் அகிரா குரோசாவா மறைந்தார்.

error: Content is protected !!