India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூட்டணி குறித்து தான் பேசியதை சிலர் வேண்டுமென்றே திரித்து கூறிவிட்டதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் ஆட்சியை அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், கூட்டணியை யாரும் விட்டுக் கொடுத்து போக வேண்டிய அவசியமில்லை என தான் பேசியதை சிலர் தவறாக திரித்து பேசி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தங்கள் கூட்டணி அருமையான கூட்டணி எனவும் தெரிவித்துள்ளார்.
*பழங்களின் தமிழ் பெயர்கள்: ஆப்பிள்- குமளிப்பழம். *செர்ரி- சேலாப்பழம். *கிவி- பசலிப்பழம். *லிச்சி- விளச்சிப்பழம். *ஆரஞ்சு- கமலாப்பழம். *மெலன்- வெள்ளரிப்பழம். *பீச்- குழிப்பேரி. *ஸ்டிராபெர்ரி- செம்புற்றுப்பழம். *வுட் ஆப்பிள்- விளாம்பழம். *ராஸ்பெர்ரி- புற்றுப்பழம். *மல்பெர்ரி- முசுக்கட்டைப்பழம். *பைனாப்பிள்- செந்தாழை. *வாட்டர்மெலன்- குமட்டிப்பழம். *டுரியான்- முள்நாரி.
பள்ளி சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன் முன்விரோதம் இருந்ததால், சத்துணவு மைய கதவில் மனித கழிவை பூசியதாக கைது செய்யப்பட்ட துரைமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியில் கடந்த 2ஆம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவமா என இபிஎஸ் உள்பட பல தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
கச்சத்தீவை மீட்டால் தான் மீனவர்கள் பிரச்னையில் தீர்வு கிடைக்கும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் மீனவர்கள் மீதான தாக்குதலின் வீரியம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 8 மாதங்களில் 320-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கச்சத்தீவை இலங்கை ஒருபோதும் திருப்பி தராது என தெரிவித்துள்ளார்.
*1965 – பாக்.-ஐ தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக இந்தியா அறிவித்தது. *1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது, இலங்கையின் குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. *1997 – இளவரசி டயானாவின் உடல் லண்டனில் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வை, 25 லட்சம் மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர். *1998 – உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் அகிரா குரோசாவா மறைந்தார்.
SEBI தலைவர் மாதபி பூரி பூச்சிற்கு எதிராக, அதன் ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதிகப்படியான கண்காணிப்பு, இலக்குகள் மற்றும் மோசமான செயல்பாடு ஆகியவற்றால் வேலை கலாச்சாரம் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அதிக சம்பளம் இருந்தபோதிலும், மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். 500 ஊழியர்கள் நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய அடுத்த நாள் போராட்டம் நடந்துள்ளது.
உ.பியில் அசைவ உணவு கொண்டு வந்த மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவிலை இடிப்பது, அசைவம் கொண்டு வந்து மற்ற மாணவர்களை மதமாற்றம் செய்யும் இது போன்ற மாணவனுக்கு தாங்கள் கற்றுக் கொடுக்க விரும்பவில்லை என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். ஆனால் தனது 7 வயது மகனுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என தாயார் மறுத்துள்ளார். இது குறித்து விசாரிக்க 3 நபர்கள் கொண்ட குழுவை போலீஸ் அமைத்துள்ளது.
*ஞானம் இல்லாத ஒரு புத்திசாலி மனிதன், வாசனை இல்லாத ஒரு அழகான பூவைப் போன்றவன். *மற்றவர்களின் வார்த்தைகளை விட அனுபவமே ஒரு உண்மையான வழிகாட்டியாகும்.*நான் ஏழை இல்லை. அதிகமாக ஆசைப்படுபவர்களே ஏழைகள். *யார் மீதும் நம்பிக்கை வைக்காதவன் ஒருபோதும் ஏமாறமாட்டான். *மனிதன் உண்மையிலேயே மிருகங்களின் அரசன்தான், ஏனெனில் அவனின் கொடூரத்தனம் மிருகங்களையே மிஞ்சியது. *ஒழுக்கமே நமது உண்மையான செல்வம்.
‘தி கோட்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் நாடு முழுவதும் ₹31.47 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் நாள் வசூலான ₹114 கோடியை முந்தவில்லை. அதேபோல், விஜய்யின் முந்தைய படமான ‘லியோ’-வின் முதல் நாள் வசூல் ₹76.2 கோடியாகும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: இல்வாழ்க்கை ▶குறள் எண்: 45 ▶குறள்: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. ▶பொருள்: இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
Sorry, no posts matched your criteria.