India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘தளபதி 69’ படத்தின் அறிமுக வீடியோவில் வரும் நிழல் காட்சிகளை கொண்டு, அப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களை ரசிகர்கள் கணித்து வருகின்றனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படத்தில், பாபி தியோல் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ நடிக்க இருப்பதாகக் கணித்துள்ளனர். உங்களுடைய கணிப்பு என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
உ.பி.யின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த கொடூரச் செயலுக்கு அப்பள்ளியின் முதல்வர் மன்னிப்பு கோரியுள்ளார். கல்விக் கட்டணம் செலுத்தாத சுமார் 100 மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல், சாலையில் அமரவைத்து அதனை வீடியோ எடுத்து அவர்களது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்தது. இந்த வீடியோ வைரலான நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து DEO, போலீசார் விசாரிக்கின்றனர்.
வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடித்ததற்காக, நடிகர் தனுஷ் தன் மீது பொறாமைப்பட்டதாக நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார். ராயன் படத்தில் நடித்த நேரத்தில் வேட்டையன் படத்திலும் நடித்ததாக குறிப்பிட்ட அவர், அப்போது ரஜினியுடன் நடித்துவிட்டீர்களா? என தனுஷ் கேட்டதாகவும், அதற்கு ஆம் என பதிலளித்தபோது முதல்முறையாக உங்கள் மீது எனக்கு பொறாமையாக இருப்பதாக அவர் கூறியதாகவும் துஷாரா தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2 தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினமாகும். அகிம்சையின் அடையாளமாக மதிக்கப்படும் காந்திக்கு மரியாதை அளிக்கும் வகையில், அன்றைய தினம் மது கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கமாகும். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி யாரேனும் மது விற்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
மகாத்மா காந்தி பிறந்த அக்.2, நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏனென்றால், காந்தி ஒரு அகிம்சாவாதி. உயிரினங்களை வதை செய்வது பாவம், அனைத்து ஜீவராசிகளையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்பது அவரது கொள்கை. இதனால் தான் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியன்று இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. Share It.
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முடிவு தேவை என்பதற்காக, 100 ரன்களில் ஆல்அவுட்டாக கூட தயாராக இருந்தோம் என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். மழையால் இரண்டரை நாள் ஆட்டத்தை இழந்ததால் BAN அணியை விரைவாக ஆட்டமிழக்க செய்ய விரும்பியதாக தெரிவித்த அவர், ஆடுகளத்தின் தன்மைக்கு எதிராக நாங்கள் பேட்டிங் செய்தது சிறந்த முயற்சி எனக் குறிப்பிட்டார். BANக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
மத்திய அரசின் கேபினட் செயலகம், துணை கள அதிகாரிகளுக்கான 160 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொறியியல், தொழில்நுட்பத்தில் இளங்கலை, அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் cabsec.gov.in என்ற இணையதளத்தில் வரும் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். GATE தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹400 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ₹50 அதிகரித்து, ₹7,100ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ₹400 உயர்ந்து ₹56,800ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமின்றி 1 கிராம் ₹101ஆகவும், 1 கிலோ ₹1.01 லட்சமாகவும் விற்கப்படுகிறது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
நியூசி., அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுதி விலகினார். அண்மையில் இலங்கையுடன் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் NZ படுதோல்வியடைந்த நிலையில், அவர் இம்முடிவை எடுத்துள்ளார். 2022ல் கேன் வில்லியம்சன் பதவி விலகலை அடுத்து கேப்டனாக பொறுப்பேற்ற இவர், மொத்தம் 14 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். தொடர்ந்து, இந்தியா உடனான டெஸ்ட் தொடருக்கு டாம் லாதம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஐரோப்பாவில் உள்ள நேட்டோ போன்றது குவாட் அமைப்பு என்றும், அது ஆசியாவின் நேட்டோ, சீனாவிற்கு எதிரானது என்றும் கூறியிருந்தார். ஆனால் இது ஜப்பானின் கருத்து. இந்தியாவுடையது அல்ல. இந்தியா பல சீரமைப்புக் கொள்கையைப் பின்பற்றுகிறது. ஜப்பானை போன்று பல நாடுகளுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.