India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அமித் ஷா சென்னை வந்தபோது, அன்புமணி அவரை சந்திப்பதை தடுக்க தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக பேசப்படுகிறது. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமையுமா என அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவதாக கூறி மழுப்பலாக பதிலளித்தார்.
IPL-ல் இன்று DC – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை விளையாடிய, 5 மேட்சில் 4-ல் DC வெற்றி பெற்று மிகவும் வலுவாக இருக்கிறது. மறுபுறம், RR கொஞ்சம் தள்ளாடி வருகிறது. 6 மேட்சில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஃபிளாட் பிட்ச், சிறிய பவுண்டரிகளுடன் இன்று டெல்லியில் ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம். இன்று, யார் ஜெயிப்பாங்க என நினைக்குறீங்க?
இந்திய அணியின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் – ஹிந்தி நடிகை சாகரிகா காட்கே தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் இருவரும் பதிவிட்டுள்ளனர். அதில், ‘அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன் எங்கள் ஆண் குழந்தை ஃபதேசின் கானை வரவேற்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். நட்சத்திர தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆபாச படத்தால் தாம் மிகவும் துன்பம் அனுபவித்ததாக நடிகை அமலாபால் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படம், மருமகள், மாமனார் இடையேயான திருமணத்தை மீறிய உறவு குறித்ததாகும். இந்தப் படத்தில் தாம் நடித்தற்காக தனது தந்தையும், குடும்பத்தினரும் மிகவும் வருத்தப்பட்டதாக அமலாபால் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் ஏப். 30 வரை அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த அளவிலான விவசாயிகளே அடையாள எண்ணை பெற்றுக் கொண்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த எண்ணை பெறாத விவசாயிகள் மத்திய அரசின் சலுகைகளை இழக்க நேரிடும். SHARE IT.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் போலீசில் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை மிரட்டல் விடுத்த வதோதராவைச் சேர்ந்த மயங்க் பாண்டியாவை போலீஸ் கைது செய்தது. அவரிடம் விசாரித்தபோது, இன்ஸ்டகிராமில் ஃபாலோயர்ஸை அதிகரிக்க இப்படி செய்ததாக கூறி இருக்கிறார். மனநோயால் பாதிக்கப்பட்ட அவர் 2014 முதல் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாவதற்கு முன்பே, அமித் ஷா தனது X பக்கத்தில் NDA கூட்டணி அமையும் என கூறியிருந்தார். கடந்த ஏப்.11 ஆம் தேதி சென்னை வந்தபோது அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்திருந்தார். அப்போது எந்த ரியாக்ஷனும் தராத இபிஎஸ், இப்போது கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கு இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
சென்னையில் அண்மையில் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சியமைக்கும் எனக் கூறியிருந்தார். இதன்மூலம் அதிமுக அமைச்சரவையில் பாஜகவும் இடம்பெறும் என கூறியிருந்தார். இதனால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்த நிலையில் இன்று பேசிய இபிஎஸ், அதிமுக அரசில் பாஜகவுக்கு இடமில்லை எனக் கூறினார். இது பாஜக, அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரித்துள்ளது. ஜன.1-ல் 1 கிராம் ₹7,150ஆகவும், 1 சவரன் ₹57,200ஆகவும் விற்கப்பட்டது. பிப். 1-ல் 1 கிராம் ₹7790, 1 சவரன் ₹62,320-ஆக விற்கப்பட்டது. மார்ச் 1-ல் 1 கிராம் ₹7,940, 1 சவரன் ₹63,520ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் ₹8,815, 1 சவரன் ₹70,520ஆக அதிகரித்துள்ளது. படிப்படியாக விலை அதிகரித்து தங்கம் புதிய உச்சம் தொட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.