India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் அறைந்ததாக நடிகை பத்மபிரியா குற்றம்சாட்டியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் படத்தில் நடித்தபோது, இயக்குநர் தம்மை அறைந்ததாகவும், ஆனால் தான் அடித்ததாக செய்தி பரவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது புகாரின்பேரில், அந்த இயக்குநருக்கு 6 மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அந்த இயக்குநர் பெயரை அவர் வெளியிடவில்லை.
ஐபோன்களை குறைந்த விலைக்கு சந்தையில் களமிறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, SE வகை ஐபோன்களை ரீ டிசைன் செய்து (Without Home Button), அதனை 2025 தொடக்கத்தில் வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சாம்சங், ஜியோமி போன்ற நிறுவனங்கள் ₹25,000-₹30,000 விலையில் நடுத்தர ஸ்மார்ட்ஃபோன்களை விற்கும் நிலையில், ஆப்பிள் SE ஐபோன்களும் ₹36,000 முதல் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது.
காந்தி ஜெயந்தியையொட்டி, பள்ளி மாணவர்களுடன் இணைந்து PM மோடி தூய்மை பணி மேற்கொண்டார். இது தொடர்பான Photosஐ Xஇல் பகிர்ந்துள்ள அவர், தனது இளம் நண்பர்களுடன் தூய்மை பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாக பதிவிட்டுள்ளார். இந்த முயற்சி, ‘தூய்மை இந்தியா’ என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்குமுன் தூய்மை இந்தியா திட்டத்தை PM தொடங்கிவைத்தார்.
தவெக முதல் மாநாட்டுக்கான பூமி பூஜை நாளை மறுநாள் (அக். 4) நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டியில் 27ம் தேதி மாநாடு நடைபெற உள்ள நிலையில், பந்தக்கால் நடும் பணி, பூமி பூஜை நடக்க உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் நடக்கவுள்ள பூஜையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன.
சீனாவில் விவாகரத்து வழக்கு விசாரணையின் போது சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. 20 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை பிரிய மனமில்லாமல், அவரை தோளின் மேல் தூக்கிக் கொண்டு கணவர் லீ நீதிமன்றத்தில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அவரை விரட்டி பிரித்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைத்தனர். தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி, லீயின் மனைவி விவாகரத்து கோரியிருந்தார்.
RBI நாணய கொள்கை குழு (MPC) வெளிப்புற உறுப்பினர்களாக, எகனாமிஸ்ட்ஸ் ராம்சிங், நாகேஷ் குமார், செளகதா பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை நிர்ணயிக்க அக்.9இல் MPC கூட்டம் நடைபெறுகிறது. இந்நேரத்தில் MPC குழுவில் இவர்கள் இணைந்துள்ளதால், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. RBI அதிகாரிகள் உள்பட 6 பேர் MPCஇல் இருப்பர்.
கதர் ஆடைகளை அணியுமாறு CM ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், கதர் பருத்தி, பாலியஸ்டர் கதர் அங்காடிகளில் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் விற்கப்படுவதாகவும் கூறினார். மேலும், கதர் தொழிலுக்கு கை கொடுக்க, தேச நலன் காக்க கதர், கிராமப்பொருட்களை வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கலாம் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தின் தலைசிறந்த தலைவரான காமராஜரின் அர்ப்பணிப்பு என்றும் போற்றப்படக் கூடியது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காமராஜரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்துள்ள ராகுல், ஒடுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டிற்கான தொலைநோக்கு பார்வை உள்ளிட்ட கொள்கைகளை ஏற்படுத்தியவர் என புகழாரம் சூட்டினார். மேலும், அவரது கொள்கை நாடு முழுவதும் உள்ள தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
TN அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், குரூப் 4 பணியிடங்களும் 10,000ஆக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, உயர்ந்தால், கட் ஆப் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் அறிவிக்கப்பட்ட 6,244 பணியிடங்கள் போக, கடந்த மாதம் கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன. ஜூன் மாதம் நடந்த இத்தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.