India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாக சைதன்யா, சமந்தா பிரிய தெலங்கானா முன்னாள் CM KCRன் மகன் கேடிஆர்தான் காரணம் என்று அந்த மாநில அமைச்சர் கோண்டா சுரேகா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “பல ஹீரோயின்கள் விரைவில் திருமணம் செய்து காெண்டு திரைத்துறையில் இருந்து வெளியேற கேடிஆரே காரணம். போதை மருந்து பார்ட்டி வைக்கப்படும், பிறகு வீடியோ எடுத்து மிரட்டுவார்கள். இது பலருக்கு தெரியும்” என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
டெல்லியில் ₹2,000 கோடி மதிப்பு கொகைன் போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ரகசிய தகவலின்பேரில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 560 கிலோ கொகைனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 பேரிடமும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான ICC தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்தியாவின் ஸ்டார் வீரர் பும்ரா அசத்தியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 870 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். இதுவரை டெஸ்ட் தரவரிசையை தக்கவைத்திருந்த மற்றொரு ஸ்டார் வீரர் அஸ்வின் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவர் கூட வங்கதேச டெஸ்ட்டில் 11 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள அனைத்து இந்து கோயில்களில் இருந்தும் சாய்பாபா சிலைகள் அகற்றப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சனாதன் ரக்ஷா தளம் (SRD) மற்றும் பிராமண சபா இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய SRD தலைவர் அஜய் சர்மா, “சாய்பாபாவை வழிபட விரும்புவோர் அவருக்கான கோயிலில் வழிபட்டுக் கொள்ளட்டும். இந்து கோயில்களில் சாய்பாபா சிலை வைப்பது சனாதனத்துக்கு எதிரானது” என்றார்.
“காவாலா…”, “ஊ சொல்றீயா மாமா…” உள்ளிட்ட ஆபாச அசைவுகளுடன் கூடிய பாடல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வன்முறை, போதைப்பொருள், பாலியல், அவதூறு காட்சிகள் கொண்ட பாடல்களின் இசை குழந்தைகளை ஈர்க்கிறது. ஒரு கட்டத்தில், பெற்றோரிடம் வரிகளுக்கான அர்த்தத்தை கேட்டு பெற முடியாத சூழலில், மற்றவர்களிடம் தகவலை பெற முயற்சிப்பது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு, கால்நடைத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளராக கே.கோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக ராஜேஷ் லக்கானி, சமூக நலத்துறை ஆணையராக ஆர்.லில்லி, மின்வாரிய தலைவராக கே.நந்தகுமார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உயர்கல்வித் துறை செயலராக பதவி வகித்து வந்தார். இதையடுத்து, உயர்கல்வித் துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பதால், அவரை இப்பதவிக்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் அமோஸ் (84) காலமானார். 1971இல் ஹாலிவுட்டில் அறிமுகமான அவர், “லாக் அப்”, “டை ஹார்டு 2” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். “குட் டைம்ஸ்” உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். கடைசியாக அவர் 2023இல் வெளியான “தி லாஸ்ட் ரைபிள்மேன்” படத்தில் நடித்திருந்தார். அவரது மறைவு குறித்து கேள்விப்பட்டு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காந்தி சிலைக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிலைக்கு CM ஸ்டாலின், துணை CM உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அடையாறு காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
வயிற்று வலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் ஆனார். உணவு ஒவ்வாமை காரணமாக நேற்றிரவு கடும் வயிற்று வலியால் அவதியடைந்த அவர், சென்னையில் உள்ள பிரைவேட் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நலம் தேறியதால் வீடு திரும்பினார். எனினும், அவர் அடுத்த 2 நாள்களுக்கு ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.