India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏழைகளின் வீடுகளை புல்டோசரால் இடிப்பதை காந்தி ஏற்றிருப்பாரா? என ப.சிதம்பரம் வினவியுள்ளார். காந்தி இருந்திருந்தால் மோடி அரசை ஆதரித்திருப்பார் என அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் பேசியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ப.சி., விருப்பமில்லா மக்கள் மீது பொதுசிவில் சட்டத்தை திணிக்கவும், J&K மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேசம் ஆக்கியதையும் காந்தி ஏற்றுக்கொண்டிருப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் செயல்பாடே, தங்களை தாக்குதல் நடத்த தூண்டுவதாக, இஸ்ரேல் ராணுவ அதிகாரி கர்னல் அவிச்சாய் அட்ரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், லெபனானை சுற்றி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரித்துள்ளார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு அருகில் இருக்கும் மக்களுக்கு ஆபத்து உள்ளதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தற்போது, மகளிர் மாநாடாக மாறிவிட்டதாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடமே ஆதரவு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இதுதான் அவர்களது கொள்கை என சாடினார். மேலும் இன்று, காந்தியை தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மட்டும் திருமா., மரியாதை செலுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவில் பேறுகால விடுப்பாக பணிபுரியும் மகளிருக்கு 6 மாத காலம் ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையின் எண்ணிக்கை, உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது.
சான் மேரினோ நாட்டில் மிக அதிகமாக 635 நாள்கள் பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. இதற்கடுத்து, பல்கேரியாவில் 410, அல்பேனியாவில் 365, போஸ்னியாவில் 365, சீனாவில் 158, இங்கிலாந்தில் 42 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.
நேருக்கு நேர் போருக்கு தயாராக இருக்கும் இஸ்ரேலும், ஈரானும் பரம எதிரிகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதே 2 நாடுகளும் 1958- 1979 வரை நெருங்கிய நட்பு நாடுகளாகும். குறிப்பாக, துருக்கியுடன் சேர்ந்து ராணுவ உடன்படிக்கையும் செய்திருந்தன. இதற்கு ஈராக்கில் இருந்த சதாம் உசேன் அரசை எதிரியாக கருதியதே முக்கிய காரணமாகும். எனினும், ஈரானில் ஷா ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியால் நட்பு முறிந்தது.
விவசாயிகளின் வேதனை குறித்து பாஜகவுக்கு தெரியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவுக்கு விவசாயிகள் குறித்தோ, ராணுவ வீரர்கள் குறித்தோ அக்கறை கிடையாது என்று சாடினார். ஆர்எஸ்எஸ்சில் விவசாயிகளோ, ராணுவ வீரர்களோ இல்லை என்பதால், அவர்களின் வேதனை பாஜகவுக்கு தெரியாது என்றும் அவர் விமர்சித்தார்.
விஜய்யின் கடைசி படமான “தளபதி 69”, பாலகிருஷ்ணாவின் “பகவந்த் கேசரி” படத்தின் ரீ மேக்காக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக-வை தொடங்கிய விஜய், தனது 69ஆவது படமே கடைசி என அறிவித்து இருந்தார். ஹெச். வினோத் இயக்கவுள்ள இப்படம் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. பகவந்த் கேசரியில் பாலகிருஷ்ணா, தனது நண்பரின் மகளை பாசத்துடன் வளர்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் இந்தியா துல்லியத் தாக்குதல் நடத்தும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலை ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக நடத்தியதாகவும், ஆனால் அப்போது காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியதாகவும் தெரிவித்தார்.
IND vs AUS இடையிலான டெஸ்ட் தொடர், நவ.22-ல் தொடங்குகிறது. இத்தொடரில் முகமது ஷமி விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய முழங்காலில் ஏற்பட்ட காயம் குணமாக 6-8 வாரங்களாகும் எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், ஆஸி.,க்கு எதிரான இத்தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே, இதில் ஷமி இல்லாதது IND-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
SK புரொடெக்ஷன் பெயரை தவறாகப் பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகார்த்திகேயன் எச்சரித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், SK தயாரிப்பு நிறுவனம் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், SK புரொடெக்ஷன் பெயரில் சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளை யாரும் நம்ப வேண்டாமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.