news

News October 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 03) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 3, 2024

திமுக ஆட்சியின் சமூக அநீதி: EPS

image

சமூக நீதி என்று பேசிக்கொண்டே, திமுக அரசு சமூக அநீதியை இழைப்பதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவரை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் அவமரியாதை செய்வதாக தர்ணாவில் ஈடுபட்ட நிகழ்வை சுட்டி காட்டிய EPS, பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவலநிலை திமுக ஆட்சியில் தொடர்கதையாகி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

News October 3, 2024

ஏன் இப்படி வதந்திகளை பரப்புகிறீர்கள்?: ஷமி

image

மக்கள் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என முகமது ஷமி கேட்டுக் கொண்டுள்ளார். ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என தகவல் பரவிய நிலையில், அவர் இதை தனது X-பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், காயத்தில் இருந்து குணமடைய தீவிர சிகிச்சையும், பயிற்சியும் மேற்கொண்டு வருவதாகவும், தான் உறுதிப்படுத்தாத எந்த செய்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 3, 2024

‘வீர தீர சூரன்’ அப்டேட்: அடேங்கப்பா.. நம்ப முடியலயே!

image

ஒரு தமிழ் படத்தில் பொதுவாக 60-62 காட்சிகள் இருக்கும். ஆனால் ‘வீர தீர சூரன்-2’ படத்தில் மொத்தமே 10-15 காட்சிகள் தான் இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் 5-7 நிமிடங்கள் இருக்கும் என கூறியுள்ளார். மேலும், முதலில் ரிலீசாகும் 2ஆம் பாகம் சண்டையில் தொடங்கும் எனவும், முதல் பாகத்தில் அதற்கான காரணம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 3, 2024

ராசி பலன்கள் (03.10.2024)

image

*மேஷம் – வெற்றி கிடைக்கும் *ரிஷபம் – கோபத்தை தவிர்ப்பது நல்லது *மிதுனம் – குழப்பமான மனநிலை உருவாகும் *கடகம் – வியாபாரம் விருத்தி அடையும் *சிம்மம் – உடல் அசதியாக இருக்கும் *கன்னி – பாராட்டு கிடைக்கும் *துலாம் – உடல் நலம் மேம்படும் *விருச்சிகம் – வாழ்வு உண்டாகும் *தனுசு – நம்பிக்கையுடன் செயல்படுங்கள் *மகரம் – பணிவுடன் இருங்கள் *கும்பம் – ஆர்வமுடன் செயல்படுங்கள் *மீனம் – சுகமான நாளாக அமையும்

News October 3, 2024

பீதி: 79 ஆண்டுகளுக்கு பின் வெடித்த குண்டு

image

ஜப்பானில் 2ஆம் உலகப்போரின் போது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு, 79 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியாசகி விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் குண்டு வெடித்ததால், 87 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், ஜப்பான் தற்காப்பு படைகள் உலகப்போரின் போது அமெரிக்கா வீசிய 2,348 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.

News October 2, 2024

கடவுள் இருக்கான் குமாரு..!

image

உ.பியில் கடவுள் சிலைகளை திருடிச் சென்ற ஒருவர், சிலைகளுடன் மன்னிப்பு கடிதத்தையும் கோயிலில் வைத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிலையை திருடியதில் இருந்து கெட்ட கனவுகள் வருவதாகவும், தன்னால் நிம்மதியாக உண்ணவோ, தூங்கவோ முடியவில்லை என்றும் அந்த திருடன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகன் மற்றும் மனைவியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிலையை திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

இது தமிழ்நாடா? மீண்டும் சாதிக்கொடுமை

image

தமிழ்நாட்டில் சமத்துவம், சமூக நீதி தழைத்தோங்குவதாக பலர் கூறுகின்றனர். ஆனால், விழுப்புரம் ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் இருளர் சமுதாயத்தை சங்கீதாவை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதி ரீதியாகத் திட்டி ஆதிக்க கும்பல் அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக, இன்று நடைபெற்ற கிராமச் சபை கூட்டத்தை புறக்கணித்து, அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

News October 2, 2024

ஹிஸ்புல்லா தாக்குதல்: இஸ்ரேல் ராணுவத்தினர் 8 பேர் பலி

image

ஹிஸ்புல்லா படையினர் நடத்திய பயங்கர தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தினர் 8 பேர் உயிரிழந்தனர். இதனை இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது. தெற்கு லெபனானில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படையினர் இந்த தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் 3 போர் விமானிகளும் அடக்கம். ஏற்கனவே, ஈரானின் அதிரடி தாக்குதலால் நிலைக்குலைந்துள்ள இஸ்ரேல், தற்போது லெபனானிலும் தங்கள் படையினர் தாக்கப்படுவதால் விழிப்பிதுங்கி நிற்கிறது.

News October 2, 2024

தமிழகத்தில் தலித் மக்களின் நிலை மோசம்: ஆளுநர் ரவி

image

கவர்னர் மாளிகையில் இன்று நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் ஆளுநர் ரவி பேசுகையில், “தமிழகத்தில் சமூக நீதியின் பெயரில் கூச்சல் இருந்தாலும் தலித் மக்களுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான குற்றம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல, தலித் பெண்களுக்கு எதிரான பலாத்கார வழக்குகளில் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது” என்றார்.

error: Content is protected !!