news

News September 7, 2024

AI மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்: CM

image

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுவான எதிர்காலத்தை கட்டமைப்போம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். BNY Mellon நிறுவன அதிகாரிகளுடன் AIல் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்ததாக x பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அறிவியலும், தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் e-office வழியே பணி தொடர்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

News September 7, 2024

மன அழுத்தமா…டேட்டிங்கிற்கு சம்பளத்துடன் விடுமுறை

image

தாய்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம், மன அழுத்தத்தை போக்க தனது ஊழியர்கள் டேட்டிங் செல்ல சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளது. ஊழியர் ஒருவர் அதிக நேரம் வேலை பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதாக கூறவே இந்த சலுகையை அளித்துள்ளது. தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற டின்டர் என்னும் டேட்டிங் செயலி பெயரில் இந்த விடுமுறையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க.

News September 7, 2024

அன்னிய செலாவணி கையிருப்பு புது உச்சம்

image

இந்தியாவிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு புதிய உச்சம் தொட்டிருப்பது RBI புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. அதில், ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி இந்தியாவிடம் ₹57.44 லட்சம் கோடி அன்னிய செலாவணி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த வார புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டதை விட ₹19,317 கோடி அதிகமென்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்ந்து 3வது வார அதிகரிப்பு ஆகும்.

News September 7, 2024

சிறிய பரிவர்த்தனைகளுக்கு 18% வரி?

image

டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் ₹2,000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்க GST கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்.9 நடைபெற உள்ள GST கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. நாட்டில் நடைபெறும் 80%க்கும் மேலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ₹2,000 கீழ் நடப்பது குறிப்பிடத்தக்கது.

News September 7, 2024

எரிமலை உச்சியில் விநாயகர் சிலை.. எங்கு தெரியுமா?

image

இந்தியாவில் மட்டுமல்ல தொலைதூரத்தில் உள்ள இந்தோனேசியாவிலும் விநாயகர் வழிபாடு நடத்தப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்திலுள்ள மவுண்ட் பிரமோ எரிமலை உச்சியில் 700 ஆண்டு விநாயகர் சிலை உள்ளது. பிரமோ என்றால் ஜாவானிஸ் மொழியில் பிரம்மா ஆகும். இந்த விநாயகர் சிலை தங்களை காக்கும் என கருதி அப்பகுதி மக்கள், ஆட்டை பலியிட்டும், பழங்களை படைத்தும் ஜாவா பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

News September 7, 2024

தங்கத்தின் விலை குறைந்தது

image

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ஒரு சவரன் ₹53,440க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ஒரு கிராம் ₹6,680க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை கிராமுக்கு ₹2.50 குறைந்து, ஒரு கிராம் ₹89.50க்கும், கிலோவுக்கு ₹2,500 குறைந்து ஒரு கிலோ ₹89,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News September 7, 2024

130 இந்தியர்களை நாடு கடத்தியது பனாமா

image

பனாமா நாடு, 130 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. பனாமா, மெக்சிகோ உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியே தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் குடியேறுவதை தடுக்க அமெரிக்கா அவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் அமெரிக்காவுக்கு செல்லும் நோக்கத்துடன் காடு வழியாக வந்ததாகக் கூறி இந்தியர்கள் 130 பேரை பிடித்த பனாமா அரசு, விமானத்தில் டெல்லிக்கு அனுப்பியுள்ளது.

News September 7, 2024

BIS அமைப்பில் வேலைவாய்ப்பு… APPLY

image

மத்திய நுகர்வோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய துறையில் 380க்கும் இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசிஸ்டென்ட் டைரக்டர், பெர்சனல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 12 பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு வருகிற 9ம் தேதி www.bis.gov.in இல் துவங்குகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 30ம் தேதி கடைசி நாளாகும். SHARE IT

News September 7, 2024

துணையை திருப்தி செய்யாதது கொடுமையே: நீதிமன்றம்

image

இல்லத்துணையின் பாலியல் தேவையை திருப்தி செய்யாததும் கொடுமையே என்று சைதாப்பேட்டை கோர்ட் தெரிவித்துள்ளது. சென்னை பெண் ஒருவர், கணவர் தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்யவில்லை. இதுபற்றி கேட்டால் துன்புறுத்துகிறார் என்று வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஒன்றாக வசித்து காெண்டு துணையை திருப்தி செய்யாதது கொடுமையே எனக் கூறி, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க கணவருக்கு உத்தரவிட்டது.

News September 7, 2024

மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைது

image

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைதாகியுள்ளார். போலி NCC முகாம் நடத்தி சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன், தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவருக்கு உதவியதாக கருணாகரனை (32) போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இவர், கடந்த 2021 தேர்தலில் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாதக வேட்பாளாராக போட்டியிட்டுள்ளார்.

error: Content is protected !!