India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி சரிந்து ₹469 லட்சம் கோடியாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 300 புள்ளிகள் சரிந்து 25,490 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 990 புள்ளிகள் சரிந்து 83,275 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம், அதிக வர்த்தக மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சந்தை சரிந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாதக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் தனக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று வேதனை வெளிப்படுத்தியுள்ள அவர், தன்னிடம் கேள்வி கேட்கக் கூடாது, தன் இஷ்டப்படியே செயல்படுவேன் என சீமான் கூறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் விலகிய நிலையில், விழுப்புரத்திலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞர் Grade-2 பதவிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. பணியில் சேர தகுதி உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள். காலியிடங்கள்: 51. கல்வித்தகுதி: Any Law Degree. வயது வரம்பு: 26-36. தேர்வு முறை: எழுத்து & நேர்முகத் தேர்வு. முதன்மைத் தேர்வானது சென்னையில் மட்டும் நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.12. கூடுதல் தகவல்களுக்கு<
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினி நாளை வீடு திரும்பவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ரத்தநாளத்தில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. 2 நாள்களாக அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை. 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு சிறையில் இருந்து திட்டம் தீட்டிய நாகேந்திரன் A1ஆகவும், தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் A2ஆகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை கைதான 28 பேரில், 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
1) உலகின் நுழைவாயில் என அழைக்கப்படுவது எது? 2) RAM என்பதன் விரிவாக்கம் என்ன? 3) பாம்பின் அறிவியல் பெயர் என்ன? 4) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்? 5) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதல் நூல் எது? 6) ரஷ்யாவின் முதலாவது செயற்கைக் கோளின் பெயர் என்ன? 7) வெள்ளியின் வேதியியல் குறியீடு என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து ஒரு சவரன் ₹56,880க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ஒரு கிராம் ₹7,110க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹101க்கும், கிலோ ₹1,01,000க்கும் விற்கப்படுகிறது.
பணவீக்கம் தொடர்பான கணக்கீட்டில் உணவு விலை பணவீக்கத்தை நீக்குவது தவறானது என RBI முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், பணவீக்கத்தின் முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டு, பணவீக்கம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறக் கூடாது என்றார். மேலும், உணவு விலை அதிகமாக இருக்கும்போது, பணவீக்கம் கட்டுக்குள் இருந்தால் RBI மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும் எனவும் கூறினார்.
‘GOAT’ படத்தின் Directors Cut-ஐ தனியாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக வெங்கட்பிரபு தெரிவித்தார். Directors Cutக்கான VFX, இறுதிப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று கூறிய அவர், தயாரிப்பாளருடன் கலந்து பேசி வருவதாகவும் Deleted Scenes ஆகவோ (அ) Extended Cut ஆகவோ வெளியிட உள்ளதாகவும் விளக்கமளித்தார். இப்படத்தின் தியேட்டர் வெர்ஷனே தற்போது நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்கிறார். தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பூமி பூஜையை தொடர்ந்து பிரம்மாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணிகள் தொடங்குகிறது.
Sorry, no posts matched your criteria.