news

News September 7, 2024

மகாவிஷ்ணு விவகாரம்: பள்ளி மேலாண்மை குழு விளக்கம்

image

மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், பள்ளி மேலாண்மைக் குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் அடங்கிய குழுவுக்கு தெரியாமலேயே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்போக்கு நிகழ்ச்சி என தெரிந்திருந்தால் முன்பே தடுத்திருப்போம். சர்ச்சை பேச்சு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம் என பள்ளி மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

News September 7, 2024

தேர்தலுக்கு பிறகு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: அமித் ஷா

image

சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். காஷ்மீரில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், சுதந்திரத்துக்கு பிறகு இந்திய தேசியக்கொடி மற்றும் அரசியலமைப்பின் கீழ் காஷ்மீரில் முதன்முதலாக தேர்தல் நடைபெற உள்ளது என்றார். உமர் அப்துல்லா மற்றும் ராகுலால் ஒருபோதும் காஷ்மீரில் ஆட்சி அமைக்க முடியாது எனவும் விமர்சித்தார்.

News September 7, 2024

மூலிகை: உடலை சுத்திகரிக்கும் ‘பச்சை ரத்தம்’

image

உடலில் இருக்கும் அசுத்தங்களை சுத்திகரிக்கும் அருகம்புல் சாறை ‘பச்சை ரத்தம்’ என்று சொல்வது சாலப்பொருந்தும். சிடோஸ்டீரால், அபிஜெனின், டிரைடெர்பீனாய்ட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அருகம்புல்லை இடித்துச் சாறு பிழிந்து (100 ml), சுவைக்கு சிறிது பனங்கற்கண்டு கலந்து காலையில் வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, உடம்பில் தேங்கிய கெட்ட நச்சுக்களை வெளியேற்றும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News September 7, 2024

குறுகியகால கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியது HDFC

image

குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை HDFC வங்கி உயர்த்தியுள்ளது. 1 மாத கடன் வட்டி விகிதம் 9.10%இல் இருந்து 9.15% ஆகவும், 3 மாத கால கடன் வட்டி விகிதம் 9.25%ல் இருந்து 9.30% ஆகவும் HDFC அதிகரித்துள்ளது. 3 மாதத்திற்கு மேல் கால அவகாசத்துடன் அளிக்கப்படும் கடன்களுக்கான வட்டியை HDFC வங்கி உயர்த்தவில்லை. அதன்படி, 6 மாத கடன் வட்டி விகிதம் 9.40%, 1,2,3 வருட கடன் வட்டி விகிதம் 9.45%ஆக உள்ளது.

News September 7, 2024

வினேஷ் போகத் தோற்பார்: பிரிஜ் பூஷன்

image

ஹரியானா தேர்தலில் போட்டியிடும் வினேஷ் போகத்தை, பாஜக தோற்கடிக்கும் என EX மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பெண்களை அவமதிக்கும் குற்றத்தை தான் எப்போதும் செய்ததில்லை என்றார். பஜ்ரங்கும், வினேஷும் தான் பெண்களை அவமதிக்கும் வேலையை செய்வதாக குற்றஞ்சாட்டிய அவர், தன் மீதான அனைத்து புகார்களுக்கும் காங்., EX முதல்வர் பூபேந்திர ஹூடா திரைக்கதை எழுதியதாகவும் சாடினார்.

News September 7, 2024

ALERT: மழை வெளுத்துவாங்கும்

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டதுடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

News September 7, 2024

வெளிநாடு முதலீட்டை ஈர்ப்பதில் பின்தள்ளப்பட்ட TN: பாமக

image

வெளிநாடு முதலீட்டை ஈர்ப்பதில் 4வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு TN தள்ளப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.8,325 கோடி முதலீடு மட்டுமே பெற்றுள்ளதாகவும், இந்த உண்மையை மறைத்து ரூ.10 லட்சம் கோடி முதலீடு, 31 லட்சம் பேருக்கு வேலை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் திமுக அரசின் பொய் பரப்புரையை மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

News September 7, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 12 <<14043014>>மணிக்கு<<>> பொது அறிவு வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) கங்கை 2) திரு.வி.க
3) மலர்மொட்டு 4) ஆந்திரப் பிரதேசம் (1,037 கி.மீ)
5) ஞானபீட விருது. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 7, 2024

BREAKING: மகாவிஷ்ணு கைதா?

image

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்து மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் பிற்போக்குத்தனமாகவும், இழிவாகவும் பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது. ‘என் ஏரியாவில் வந்து ஆசிரியரை அவமதித்ததை சும்மா விடமாட்டேன்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்திருந்தார். இந்நிலையில், போலீசார் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.

News September 7, 2024

நாளை மறுநாள் ‘வேட்டையன்’ பர்ஸ்ட் சிங்கிள்

image

ஞானவேல், ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ என்ற முதல் சிங்கிள் செப். 9ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அக்.10ல் இப்படம் வெளியாக உள்ளதையொட்டி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அமிதாப் பச்சன், பகத் ஃபாசில் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் உள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

error: Content is protected !!