India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் மாணவிகள் சாமியாடிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார். புத்தகத் திருவிழாவில் நடந்தது முழுக்க, முழுக்க கிராம கலை நிகழ்ச்சி மட்டுமே நடத்தப்பட்டது. மதச்சாயமோ, ஜாதிச் சாயமோ பூச வேண்டாம், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் டெஸ்டில் சதமடித்ததன் மூலம் இங்கி., வீரர் ஆலி போப் புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அவர் 7 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் முதல் 7 சதங்களையும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆலி போப் முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ளார்.
Airport-இல் கைது செய்யுமளவுக்கு மகாவிஷ்ணு என்ன தீவிரவாதியா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி நிர்வாகம் அழைக்காமல் எப்படி ஒருவர் அங்கு சென்று பேச முடியும் எனவும் வினவியுள்ளார். பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் தெரியாது என்றால் பள்ளி மேலாண்மைக் குழுவும், பள்ளிக்கல்வி துறையும் இருந்து என்ன பயன் என்றும் விமர்சித்தார். தெரியாது என்று கூறுவதற்கு அரசு நிர்வாகம் தேவையில்லை என்றும் அவர் சாடினார்.
Jio, VI நிறுவனங்களை தொடர்ந்து தனது அதிரடி ஆஃபரை அளித்து ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது, ₹979, ₹1029, ₹3599 ஆகிய மூன்று திட்டங்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்தால் (10GB) கூடுதல் டேட்டா, Disney+ Hotstar உள்ளிட்ட ஓடிடி சேவை, Xstream Premium போன்ற பல சலுகைகள் இதில் கிடைக்கும். வரும் 11ஆம் தேதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களில் அடையாளம் காண முடியாத குற்றங்கள் தொடர்பாக மக்கள் அளிக்கும் புகார் மனுக்களை, போலீசார் பெற்றதை உறுதிசெய்து வழங்கப்படும் ஒப்புதல் சீட்டை சமுதாய சேவை பதிவேடு (Community Service Register Copy) என்பர். இப்புகார் மனு மீது விசாரணை நடத்தி குற்றம் நடந்ததற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பின் அதிகாரிகள் FIR பதிவு செய்வர். CSR பதிவை தினசரி நாட்குறிப்பு அறிக்கை என்றும் அழைப்பர்.
துலீப் கோப்பை தொடரில் இந்தியா D அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா C அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா D அணி 164 & 236 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் தலைமையிலான இந்தியா C அணி முதல் இன்னிங்ஸில் 168, 2ஆவது இன்னிங்ஸில் 233/6 எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பாபா இந்திரஜித் பேட்டிங் முக்கிய திருப்புமுனையாக இருந்தது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து இன்ஸ்டாகிராம் பதிவை பகிர்ந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாகவே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், கோவை, சேலம், திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
மக்கள் நடிகர்களுக்கு ஓட்டு போடும் காலமெல்லாம் மாறிவிட்டதாக புதுச்சேரி Ex முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரை தவிர வேறு யாரும் கட்சி ஆரம்பித்து நிலைக்கவில்லை என்றும், பலர் கட்சி ஆரம்பித்து இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார். விஜய் கட்சி ஆரம்பிப்பதால், திமுக தலைமையிலான கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வர போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் புதிதாக 9 மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு வேளாண் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால், பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 9 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் நோய் பரவல் குறையவில்லை. இதனால், எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.