news

News September 7, 2024

கொங்கன் ரயில்வேயில் பணி

image

கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள 190 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. Technician, Loco Pilot உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 10 & 12, Diploma, ITI (NCVT/SCVT). வயது வரம்பு: 18-36. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.,6. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு & நேர்காணல். கூடுதல் தகவல்களுக்கு <>KRCL<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News September 7, 2024

உலகளவில் I-PHONE முதலிடம்

image

உலகளவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் IPhone முதலிடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15, 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம் உலக சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் IPhone 25% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. தென்கொரியாவின் சாம்சங் 21% பங்களிப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

News September 7, 2024

பார்வையற்ற வீரர்கள் எவ்வாறு போட்டியிடுகின்றனர்?

image

பாராலிம்பிக்ஸ் ஓட்டப்பந்தயத்தில் பார்வை குறைபாடுடைய வீரர்கள் எவ்வாறு போட்டியிடுகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழும். மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள் ஒரு வழிகாட்டியின் துணையுடன் ஓடுகளத்தில் போட்டியிடுவர். அவர்கள் விளையாட்டு வீரர்களை தள்ளவோ ​​அல்லது இழுக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன் தயாரிப்பில் இருந்து தொடங்கி இறுதிவரை உடனிருக்கும் வழிகாட்டியும் வீரருடன் மேடையில் பதக்கங்களைப் பெறுவர்.

News September 7, 2024

BREAKING: விஜய்யின் தவெகவிற்கு அங்கீகாரம்

image

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு 6 மாதங்கள் கழித்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 7, 2024

மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

image

கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய அவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 7, 2024

இனி பள்ளிகளில் இப்படி நடக்காது

image

பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சியை தீவிரமாக கண்காணிக்கப்படும். இனி பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், மூட நம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

News September 7, 2024

இனி பள்ளிகளில் இப்படி நடக்காது

image

பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சியை தீவிரமாக கண்காணிக்கப்படும். இனி பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், மூட நம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

News September 7, 2024

Tech Talk: அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

image

உலகின் 2ஆவது பெரிய 5G ஸ்மார்ட் ஃபோன் சந்தையாக இந்தியா உருவாகியுள்ளதாக Counterpoint நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில், பட்ஜெட் விலையில் Xiaomi, Vivo போன்ற ஃபோன்கள் கிடைப்பது, 5G நெட்வொர்க் விரிவாக்கம், சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. சீனா, அமெரிக்கா பட்டியலில் முறையே 1&3 ஆகிய இடங்களில் உள்ளன.

News September 7, 2024

விரைவில் வெளியாகும் ‘கேம் சேஞ்சர்’ 2ஆவது சிங்கிள்!

image

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகிவரும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் 2ஆவது சிங்கிள் இம்மாதம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றின் பிரம்மாண்ட உருவாக்கத்திற்காக மட்டும் ₹90 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்து உள்ளார்.

News September 7, 2024

நாளை காலை 11.17க்கு விஜய் முக்கிய அறிவிப்பு

image

TVK மாநாடு நடைபெறும் தேதியை நாளை விஜய் அறிவிக்க உள்ளார். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரி TVK நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். இந்த மனு போலீசாரின் பரிசீலனையில் உள்ள நிலையில், நாளை காலை 11.17க்கு மாநாட்டு தேதியை விஜய் அறிவிக்கிறார். செப்.23ல் மாநாடு நடைபெறும் என்று முன்பு தகவல் வெளியான நிலையில், அதே தேதியில் மாநாடு நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!