news

News September 7, 2024

சென்னையில் IND-BAN டெஸ்ட்: செப்.,9 முதல் டிக்கெட் விற்பனை

image

இந்தியா-வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்.9இல் தொடங்கவுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்.19இல் நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை செப்.9ஆம் தேதி காலை 9.45க்கு தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2ஆவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்.,27இல் நடக்கிறது.

News September 7, 2024

விநாயகர் சதுர்த்தி: சர்ச்சையில் விஜய்

image

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என புதிய சர்ச்சையை பாஜக கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம், புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார் என இரவு 7 மணி வரை காத்திருந்தேன். ஆனால், சொல்லவில்லை. சிறுபான்மையினரை குஷிப்படுத்தும் அதே பழைய தந்திரம். திமுகவை காப்பியடிக்கும் அளவுக்கு தாழ்ந்து போயிருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

News September 7, 2024

BREAKING: தமிழகத்தில் விரைவில் தேர்தல்

image

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகள் டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News September 7, 2024

ஹரியானாவில் CONG-AAP தொகுதி உடன்பாட்டில் இழுபறி?

image

ஹரியானாவில் காங்-ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 90 தொகுதிகளை உடைய அம்மாநிலத்தில் அக்.,5இல் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக CONG-AAP இடையே கூட்டணி பேச்சுவார்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், 10 தொகுதிகளில் போட்டியிட AAP விருப்பம் தெரிவித்த நிலையில், 5 இடங்களை தர காங்., விரும்புகிறது. கூட்டணி ஏற்படாவிட்டால் 50 இடங்களில் AAP தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது.

News September 7, 2024

இந்தியாவுக்குள் பாக்., ஊடுருவியது அம்பலமானது!

image

கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ள தொடர்பை முதல் முறையாக பொதுவெளியில் அந்நாடு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. ராவல்பிண்டியில் பேசிய பாக்., ராணுவ ஜெனரல் அசிம் முனீர், 1948, 1965, 1971 & கார்கில் போர் உள்ளிட்ட பல சமயங்களில் ஆயிரக்கணக்கான நமது வீரர்கள் இஸ்லாத்துக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் பாக்., இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது அம்பலமாகியுள்ளது.

News September 7, 2024

29 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச தடகள போட்டி

image

தமிழ்நாட்டில் 29 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச தடகள போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு விளையாட்டரங்கில் செப்டம்பர் 11ஆம் தேதி தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்னதாக 1995இல் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. சமீபத்தில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்ற நிலையில் இப்போட்டி மக்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 7, 2024

ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது

image

பிரபல மலையாள நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்களை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஹைதராபாத் சென்ற போது அவர் போதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல மதுபோதையில் தாக்குதலில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.

News September 7, 2024

டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த ஹிந்து அமைப்பு!

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்புக்கு Hindus for America First அமைப்பு ஆதரவளித்துள்ளது. அவ்வமைப்பின் நிறுவனர் உத்சவ் சந்துஜா, பைடன் ஆட்சியில், USAஇல் எல்லைப் பிரச்னைகளைத் தீர்க்க முடியாததால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வென்றால், இந்திய -அமெரிக்க உறவில் சிக்கலை ஏற்படலாம். எனவே ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் எதிராக பிரசாரம் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

பூஜா கெட்கர் பணியில் இருந்து நீக்கம்!

image

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கெட்கர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் வாயிலாக OBC & மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளைப் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய பணியாளர் & பயிற்சி துறை மேற்கொண்ட விசாரணையில் குற்றச்சாட்டு உண்மையென நிரூபணமானது. இதன் அடிப்படையில், பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீது குற்ற வழக்கு தொடரப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

News September 7, 2024

மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை சிறை

image

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை கூறியது, மாற்றுத்திறனாளிகளை அவமதித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் இன்று கைது செய்யப்பட்டார். 5 பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

error: Content is protected !!