news

News October 4, 2024

தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

image

தவெக தொண்டர்களை தோழர்களே எனக் குறிப்பிட்டு மாநாட்டிற்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அதில், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டு பணிகள் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டு, வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என்றும் நெகிழ்ந்துள்ளார்.

News October 4, 2024

நடக்கும்போது அவர்களுக்கு புரியும்: விஜய்

image

தவெக மீது கேள்விகளை வீசுவதில் சிலர் அதீத விருப்பம் கொண்டுள்ளதாக விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், “இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? இவர்களால் வென்று காட்ட முடியுமா?” என கேள்வி எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போது அவர்களுக்கு புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 4, 2024

புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை!

image

கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து ஒரு சவரன் ₹56,960க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ஒரு கிராம் ₹7,120க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ஒரு கிராம் ₹103க்கும், கிலோ ₹1,03,000க்கும் விற்கப்படுகிறது.

News October 4, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் மிகச் சிறிய சந்து எது? 2) IPO என்பதன் விரிவாக்கம் என்ன? 3) பௌத்த மதத்தின் புனித நூல் எது? 4) அகத்திணையும், புறத்திணையும் சேர்ந்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? 5) புலிகளின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 6) உலகின் முதல் பைக் சிட்டி எது? 7) வைரத்தின் வேதியியல் குறியீடு என்ன? 8) இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 4, 2024

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

SBI வங்கியில் நிரப்பப்படவுள்ள 1,497 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு பிரிவு அலுவலர், உதவி மேலாளர் பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: BE, B.Tech , M.Sc, M.Tech. வயது வரம்பு: 21-45. சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பக் கட்டணம்: ₹755. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>SBI<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News October 4, 2024

‘கங்குவா’ இசை வெளியீட்டு விழா எப்போது?

image

‘கங்குவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் நவ.14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 3டி முறையில் சரித்திர கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

News October 4, 2024

ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு வழங்க வேண்டும்

image

அத்தியாவசிய உணவு பொருள்களை தீபாவளி தொகுப்பாக ரேஷனில் வழங்க வேண்டுமென CPM மாநிலக் குழுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னையில் நடந்த அக்கட்சியின் மாநில மாநாட்டில், விலைவாசி உயர்வு காரணமாகத் திண்டாடும் தீபாவளியாக மாறும் சூழல் உள்ளது. இதனால், மக்கள் நலன் கருதி ரேஷன் கடைகளில் சர்க்கரை, கடலை மாவு, பாமாயில், பருப்பு, மைதா போன்ற பொருள்களை தீபாவளி தொகுப்பாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 4, 2024

புத்தி கூர்மையை பலப்படுத்தும் முட்டை!

image

முட்டை சாப்பிடுவது புத்தி கூர்மையை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வயதாகும்போது நினைவாற்றல் பலவீனமடைகிறது. இந்நிலையில், ஜர்னல் ஆஃப் நியூட்ரியண்ட்ஸ் இதழ் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி, முட்டை சாப்பிடுபவர்களுக்கு வயதாகும்போது நினைவாற்றல் பிரச்னை குறைவதாகக் கூறப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேற்பட்ட 890 பேரிடம் நடத்திய ஆய்வில் பெண்களை விட ஆண்கள் அதிக முட்டை உட்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

News October 4, 2024

தெலுங்கில் ரீமேக்காகும் சூரியின் ‘கருடன்’

image

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் ‘கருடன்’. மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதுடன், வசூலையும் வாரிக் குவித்த இந்தப் படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. கருடன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நாயகனாகவும், நரா ரோஹித், மனோஜ் மஞ்சு உள்ளிட்ட மேலும் பலர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை விஜய் கனகமெடலா இயக்க உள்ளார்.

News October 4, 2024

VOTER ID: நவம்பரில் சிறப்பு முகாம் நடக்குது மக்களே!

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எழுதிய கடிதத்தில், NOV. 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முகாமுக்கு தேவையான படிவங்களை தயாராக வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!