India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் பங்கேற்றிருந்தனர். இந்தியா இதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது. 94 தங்கம், 73 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 216 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
ராமநாதபுரம் அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராமேஸ்வரம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த அந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருமன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி ஷங்கர் தெலுங்கு சினிமாவில் களமிறங்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், விஜய் கனகமெடலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். அவருக்கு தெலுங்கு மொழி சரளமாக பேசத் தெரியும் என்பதால், தெலுங்கு படத்தில் நடிக்க எந்தவித பிரச்னையும் இருக்காது என அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வழக்கில் இதுவரை முக்கிய ரவுடிகள், அரசியல் பிரமுகர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். ஒருவர் மட்டும் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
*அமெரிக்கா: ஸ்டார்லைனர் விண்கலம், பூமிக்கு காலியாகத் திரும்பியது. *கிர்கிஸ்தான்: பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பயங்கரவாத பட்டியலில் இருந்து தலிபான்களை கிர்கிஸ்தான் அரசு நீக்கியுள்ளது. *வியட்நாம்: யாகி புயல் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனடா: அமெரிக்காவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தானி ஷாசீப் ஜாடூன் கைது.
ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தினம்பலமான திருவள்ளூர் திருவாலங்காட்டில் வட ஆரண்யேஸ்வரரை வழிபட்டால் பிறவிப் பிணிகள் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் ஊர்த்துவ தாண்டவத்தை கண்ணால் கண்டு காரைக்கால் அம்மையார் முக்திப் பெற்ற இத்திருத்தலத்திற்கு விரதமிருந்து சென்று, இறைவனை தொழுது, வில்வ இலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, தேவாரம் பாடி, புட்டு படைத்து வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது ஐதிகம்.
மத்திய பிரதேசத்தில் பொதுவெளியில் நடந்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் முகமது சலீம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில், அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, பலாத்காரம் செய்த லோகேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை மது அருந்த செய்து, பின்னர் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
வருமான வரி கட்டுவதில் சல்மான் கான், அமிதாப் பச்சனை நடிகர் விஜய் முந்தியுள்ளார். 2023-24 நிதியாண்டில் ₹80 கோடி வருமான வரியை அவர் செலுத்தியுள்ளார். இதன் மூலம் சினிமா துறையில் அதிக வரி கட்டும் பிரபலமாக அவர் மாறியுள்ளார். அதேவேளையில், நடிகர்கள் சல்மான் கான் ₹71 கோடியும், அமிதாப் பச்சன் ₹75 கோடியும் வரி செலுத்தியுள்ளனர். ‘தி கோட்’ படத்திற்கு விஜய் ₹200 கோடி சம்பளம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சில வெங்காயங்களில் காணப்படும் கருப்பு அச்சு ஆஸ்பெர்கிலஸ் நைகர் என அழைக்கப்படுகிறது. இந்த வகை பூஞ்சை மண்ணில் இருந்து பரவுகிறது. இது ஒரு வகையான நச்சுவை வெளியிடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அலர்ஜி, ஆஸ்துமா இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் கருப்பு அச்சு உள்ள லேயரை, உள் பாகங்களில் படாமல் நீக்கிவிட்டு சமையலில் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்த இந்தியா, சீனாவால் உதவ முடியும் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச சட்ட விதிகளை மீறுவது உலகமயமாக்கலுக்கு எதிரானது எனவும், உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச விதிகளை கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.