India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி (37) அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய நேரம் இது என பேட்டியளித்துள்ளார். 68 டெஸ்ட், 138 ஒருநாள், 92 T20 மற்றும் 352 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஏற்கெனவே இவர் 2 முறை ஓய்வை அறிவித்து, தனது முடிவை வாபஸ் பெற்றுள்ளார். இனி ஓய்வுபெறும் முடிவில் பின்வாங்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களாக உயர்ந்து காணப்பட்ட கறிக்கோழி விலை, தற்போது சற்று குறைந்துள்ளது. கறிக்கோழி (உயிருடன்) விலை 1 கிலோ ₹91ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இன்று சில்லறை விற்பனையில் 1 கிலோ கோழி இறைச்சி ₹180 முதல் ₹200 வரை விற்பனையாகிறது. முட்டை விலை மொத்த கொள்முதலில் ₹4.80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹6க்கு விற்கப்படுகிறது.
‘அவுரி அழவனம் அவரை காக்கும்’ என்று அம்மான் பச்சரிசியின் ஆற்றல் குறித்து மூலிகைக் குறள் கூறுகிறது. பெடுலின், ஆல்ஃபா-அமைரின் , கேம்ஃபால் , குவர்சிடின், யூபோர்பின் ஏ போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இம்மூலிகையை முறையே சுத்தி செய்து, நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதை 5 கிராம் அளவு எடுத்து, பசும்பாலில் கலந்து 48 நாட்கள் அருந்தினால், விந்தணுக்கள் அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தனது பேச்சு தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கிலேயே பேசியதாகவும், இதுபோன்று பல இடங்களில் பேசியுள்ளதாகவும் போலீசாரிடம் விளக்கமளித்துள்ளார். மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும் வகையில் பேசியதாக காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கைதுசெய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டியில் விஜய்யின் தவெக மாநாட்டை செப்.23ல் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது உட்பட 21 கேள்விகளை காவல்துறை எழுப்பியிருந்தது. அதற்கு, தவெக தரப்பில் பதிலளிக்கப்பட்ட நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 11.17 மணிக்கு அக்கட்சி தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
வாராந்திர அடிப்படையில் திங்கள் – வெள்ளி வரையிலான மொத்த அளவீட்டில் 383 புள்ளிகள் இறக்கத்துடன் NIFTY நிறைவடைந்தது.பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி போன்றவற்றின் தாக்கம் சந்தையின் அடுத்த வார நகர்வை நிர்ணயிக்க வாய்ப்புள்ளதென வல்லுநர்கள் கூறுகின்றனர். இது போன்ற தெளிவற்ற சூழ்நிலைகளில், கணிப்புகள் தவறாகிவிடும் வாய்ப்புகள் இருப்பதை நினைவில் கொண்டு, வர்த்தகர்கள் தமது திட்டங்களை தீட்டிக்கொள்ள வேண்டும்.
தென்காசி அருகே அதிமுக நிர்வாகி வெளியப்பன் மர்மநபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அதிமுக முன்னாள் ஒன்றிய துணைத் தலைவரான அவர், காலையில் நடைபயிற்சி சென்றபோது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
*பாரிஸ் பாராலிம்பிக்ஸ் கனோ ஸ்பிரிண்ட் இறுதிப்போட்டிக்கு பிரச்சி யாதவ் முன்னேறியுள்ளார். *இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவில் இன்று தொடங்குகிறது. *SCO அணிக்கு எதிரான T20 தொடரை ஆஸி. அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. *அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் ஃபைனலுக்கு இத்தாலியின் சினெர், அமெரிக்காவின் பிரிட்ஸ் தகுதி பெற்றுள்ளனர்.
தவெகவின் மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து வரும் வகையில், தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்க மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். விக்கிரவாண்டியில் 23ம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தொண்டர்கள் எவ்வித சிரமமும் இன்றி வந்து செல்லும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக பொறுப்பாளர்களும், குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாசர் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் இக்கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேமா கமிட்டி அறிக்கை, நடிகர் சங்க கட்டடம், தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.