India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
27 ஆண்டுகளுக்குப் பின் இரானி கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி. Rest Of India அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தபோதிலும், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ROI முதல் இன்னிங்சில் 416 ரன்களும், MUM அணி இரு இன்னிங்சிலும் முறையே 537 & 329/8 ரன்களும் எடுத்து. இது மும்பை அணி வெல்லும் 15வது இரானி கோப்பையாகும்.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில், 3 PM நிலவரப்படி 49.13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சற்று மந்த நிலையிலேயே வாக்கு பதிவாகின்றன. அதிகபட்சமாக யமுனாநகர் தொகுதியில் 56.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. OCT 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
போருக்கு மத்தியில், சுமார் 15,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப அரசு முயன்று வருவதாக கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கான ஆட்சேர்ப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இது மோடி அரசின் கொள்கையால் ஏற்பட்டுள்ள வேலையின்மையை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இதற்கு முன் பல இந்தியர்கள் வேலைக்காக ரஷ்யா அழைத்து செல்லப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. கடந்த 2 முறை இத்தொடரை வென்ற இந்திய அணியை வீழ்த்தி இந்த முறை கோப்பையை வெல்வோம் என ஆஸி., வீரர் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவும், ஆஸி.,யும் டெஸ்ட்டில் டாப் 2 அணிகளாக உள்ளன என்ற அவர், இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யை சமாளிக்க நடிகர் பிரகாஷ் ராஜை களமிறக்க, ஆளும் திமுக மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாம். திமுக கொள்கையுடன் பிரகாஷ் ராஜ் ஒத்துப்போவதால், சட்டசபை தேர்தலுக்கு, அவரை திமுகவின் பிரசாரப் பீரங்கியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர் திமுகவில் சேருவாரா அல்லது வடிவேலுவை போல, விஜய்க்கு எதிராக பிரசாரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவாரா என்பது தெளிவான எந்த தகவலும் இல்லை.
ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டால், அதை இஸ்ரேல் மீது பயன்படுத்தியே தீருவார்கள் எனவும், அதற்கு முன்னதாக இஸ்ரேல் சுதாரித்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டிரம்பின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ITBP படையில் காலியாக உள்ள 345 மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Super Specialist, Special & Assistant Medical Officer பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: MBBS. வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹21,700 – ₹69,100. விண்ணப்பக் கட்டணம்: ₹400. விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ. 14. கூடுதல் விவரங்களுக்கு <
இந்தியாவில் 79% குடும்பங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீன தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றன. அத்தகைய பொருட்கள் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகளை சீனா கண்காணிக்க அதிக வாய்ப்புள்ளதாக லோக்கல் சர்க்கிள் ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்னதாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லேப்டாப், ட்ரோன்கள், CCTV கேமராக்களை தீவிரமாக கண்காணிக்க இந்திய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
பூமியில் இருந்து 450 ஒளி ஆண்டுகள் (1 ஒளி ஆண்டு = 5.8 டிரில்லியன் மைல் தொலைவு) தூரத்தில் உள்ளது HL Tauri நட்சத்திரம். இது Taurus தொகுப்பில் உள்ள இளம் நட்சத்திரம் (வயது: 1 லட்சம் ஆண்டுக்கு குறைவு). இந்நட்சத்திரம் தொடர்பாக ALMA Telescope வழியாக ஆய்வு நடத்திய இத்தாலிய விஞ்ஞானிகள், இதில் நீல நிறத்தில் நீராவியாக உள்ள நீரின் அளவு, பூமியின் கடல்களில் உள்ள நீரின் அளவைவிட 3 மடங்கு அதிகமென கண்டறிந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று கணித்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.