India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் தினந்தோறும் ஏராளமானோர் திருமணம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று மட்டும் 354 திருமணங்கள் அங்கு நடைபெற்றன. கடந்த 2017ஆம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. இன்று காலை 4 மணி முதலே திருமணங்கள் நடைபெற தொடங்கின. இதனால் குருவாயூர் கோயில் முழுவதும் திருவிழா கோலம் பூண்டு காணப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள் விடுமுறைகள் முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் கிளம்பியுள்ளனர். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி கிளம்பியுள்ளதால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வாகன ஓட்டிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு தயக்கம் கிடையாது பயம் என்று அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, பஞ்சாயத்து தலைவருக்கும் கூட அதிகாரம் உள்ளது. முதல்வருக்கு இல்லையா? என்று கேள்வி எழுப்பிய அவர், ஸ்டாலினுக்கும் சமூகநீதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்றுக்கான அறிகுறி காணப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்று திரும்பிய இளைஞரை பரிசோதனை செய்ததில், அவரின் உடலில் காணப்படும் அறிகுறிகள் குரங்கம்மை தொற்றை ஒத்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது.
துலீப் டிராபி தொடரில் தோனியின் சாதனையை துருவ் ஜூரல் சமன் செய்துள்ளார். இந்திய A அணியின் விக்கெட் கீப்பரான அவர், இந்திய பி அணிக்கு எதிராக 2ஆவது இன்னிங்ஸில் 7 கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் தோனி கடந்த 2004இல் கிழக்கு மண்டல அணிக்கு எதிராக 7 கேட்ச் பிடித்த சாதனையை சமன் செய்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 1 கேட்ச் பிடித்த அவர் மொத்தமாக இந்த டெஸ்டில் 8 கேட்ச் பிடித்துள்ளார்.
நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. தற்போது நடிகர் சங்க கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அதை தொய்வின்றி நடத்த இந்த பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகர் சங்க கட்டிடம் கட்ட வாங்கிய கடனை அடைப்பதற்காக கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மகாவிஷ்ணு கைதை கண்டித்த சீமான், பிற்போக்கு அரசியலை முன்னெடுக்கிறாரா? என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். பிற்போக்கு சிந்தனைகளை ஆதரிப்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறிய அவர், தற்போதுதான் விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார். எடுத்த உடனே அவர் முதலமைச்சர் ஆகிவிட முடியாது. கடுமையான சவால்களை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கடைசி வரை குரல் கொடுப்பேன் என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். காங்கிரஸில் தான் சேர்ந்ததால் தன்னை தேச விரோதிகள் போல பாஜகவும், பிரிஜ்பூஷனும் விமர்சிக்கிறார்கள் என்ற அவர், ஒருவேளை பாஜகவில் சேர்ந்திருந்தால் தன்னை தேச பக்தன் என்று அவர்கள் கூறியிருப்பார்கள் எனவும் குறிப்பிட்டார். 2 நாட்களுக்கு முன்பு CONG சேர்ந்த அவருக்கு விவசாய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
நடிகர் சங்கத்திற்கு விஜய் ₹1 கோடி நிதி கொடுத்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறையால், பல ஆண்டுகளாக கட்டடப் பணிகள் நிறைவு பெறவில்லை. இப்பணி முழுமை பெற ₹40 கோடிக்கு மேல் தேவைப்பட்டதால், ஒவ்வொரு நடிகரும் நிதி அளிக்கின்றனர். அந்த வகையில், விஜய்யும் தனது பங்கிற்கு ஒரு கோடி அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.