India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பையில் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அங்கு பெரும் திரை நட்சத்திரங்கள் வந்திருந்த நிலையில் நடிகை சாரா அலிகான் அணிந்து இருந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர், 60 ஆண்டுகள் பழமையான மறுசுழற்சி செய்யப்பட்ட Brocade புடவைகளால் தயாரிக்கப்பட்ட லெஹங்கா உடையை அணிந்திருந்தார். இதுகுறித்தான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலினுடன் இருப்பது டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவரல்ல என்பது பொய்யானது என்று TN Fact Check தெரிவித்துள்ளது. ஜிம் மடேஜ் சமீபத்தில் தான், டிரில்லியண்ட் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆகையால், அவர் குறித்து விவரங்கள் அப்டேட் செய்யப்படவில்லை. அவரது அருகே உள்ள மைக் மோர்ட்டிமர் பற்றி விவரங்கள் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் இருப்பதைக் காணலாம் என தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை கட்டுப்பாடின்றி நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 4 வழிச் சாலை பணிகளுக்கு, கனிமவளங்கள் தேவை என்று கூறி மலைகளை தகர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். தகர்க்கப்படும் கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுவதாகவும், அதை அரசு தடுத்து, உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2019 ஆண்டுக்கு முன்பாக, காஷ்மீரில் பயங்கரவாத சூழல் நிலவியது. ஆனால், இன்று யாரும் கைத்துப்பாக்கியை எடுக்கவோ, துப்பாக்கி சூடு நடத்தவோ துணிவதில்லை எனக் குறிப்பிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம் என்றார். இங்கு செப். 18, 25 மற்றும் அக்.1இல் தேர்தல் நடைபெறுகிறது.
துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைந்து ’காந்தா’என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. பாக்யஸ்ரீ என்பவர் துல்கருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
விஜய்யின் தவெகவில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர் தவெகவில் இணையும் பட்சத்தில், கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
விஜய் கட்சியால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் வராது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திராவிட கொள்கைகளை பேசும் தமிழக வெற்றிக் கழகத்தால் மற்ற திராவிட கட்சிகளுக்கு தான் பாதிப்பு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீட், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது என திராவிட கட்சிகள் பேசும் அதே அரசியலை விஜய்யும் முன்னெடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து உள்ளது. இன்று நடைபெற்ற சீனாவிற்கு எதிரான போட்டியில், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. சுக்ஜீத், உத்தம் மற்றும் அபிஷேக் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜப்பான் அணியை நாளை எதிர்கொள்ள உள்ளது.
BJP-யில் இருந்து முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் பேரன், ஆதித்யா தேவி லால் விலகியுள்ளார். 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் அக்டோபர் 5இல் தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக 67 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்த ஆதித்யா, அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து இந்திய நேஷனல் லோக் தளம் கட்சியில் இணைந்த அவர், தப்வாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் இன்று இரவு ஆலோசனை நடத்தவுள்ளார். அமெரிக்காவில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இரவு 7.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் குழு உறுப்பினர்களான உதயநிதி, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த குழுவினர் இதுவரை 3 முறை ஆலோசனை நடத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.