news

News October 6, 2024

ரேஷனில் கூடுதல் கோதுமை வழங்கப்படும்: சக்கரபாணி

image

ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு 25,000 டன் கோதுமை வழங்க மத்திய அரசை வலியுறுத்தியதாகக் கூறிய அவர், அதனை ஏற்று, மத்திய அரசு 17,100 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தகுதியானோர் விண்ணப்பித்தால் 15 நாள்களில் ரேஷன் கார்டு தரப்படும் எனவும் அவர் கூறினார்.

News October 6, 2024

விநோதம்: பெண்ணுக்கு முடியை உண்ணும் நோய்

image

உ.பியில் 21 வயதான இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 2 கிலோ முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்ட அப்பெண்ணுக்கு, விநோதமான முடியை உண்ணும் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக பெற்றோருக்குத் தெரியாமல் முடியை சாப்பிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த 4ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவருக்கு, தற்போது மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

News October 6, 2024

இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு

image

மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 105/8 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் நிதா தர் மட்டும் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அருந்ததி ரெட்டி 3, ஷ்ரேயங்கா பாட்டில் 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 106 ரன்கள் எடுத்து வெற்றிபெறுமா?

News October 6, 2024

இஸ்ரேல் தாக்குதலில் 26 பேர் பலி: ஹமாஸ்

image

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மசூதி ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்த 26 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “டெய்ர் அல்-பாலாவில் உள்ள மசூதி மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அகதிகள் பலத்த காயம் அடைந்துள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் அரசு, ஹமாஸ் கட்டளை மையம் உள்ளிட்ட பகுதிகளை துல்லியமாக கண்டறிந்து அழித்ததாக தெரிவித்துள்ளது.

News October 6, 2024

மூலிகை: இதயத்தை பலப்படுத்தும் செந்நாயுருவி

image

ஹீமோகுளோபின், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றல் செந்நாயுருவிக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அலாக்ஸான், பிடைன், அகைராந்தைன் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் முழுச் செடியையும் அரைத்து, நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, குடிநீராக 48 நாட்கள் பருகிவந்தால், ரத்தக் குழாய்களில் வீக்கமோ பாதிப்போ ஏற்படாமல் தடுப்பதோடு, இதயமும் பலம் பெறும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News October 6, 2024

நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

image

சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை மாலை 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சுமார் ₹25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பூங்காவில் அருவி, கண்ணாடி மாளிகை, இசை நீரூற்று, பறவையகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு ₹100, சிறியவர்களுக்கு ₹50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News October 6, 2024

ட்ரெண்ட் செட்டர்னா அது தோனிதான்: கெயில்

image

தோனிதான் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். தோனி ட்ரெண்ட் செட்டராக இருந்ததாகவும், ரோஹித் ஷர்மாவும், கோலியும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், ஏதாவதொரு IPL அணியில் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ இருந்து இளம் வீரர்களுக்கு தனது ஐபிஎல் அனுபவங்களை பகிர விருப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

தெலுங்கு பக்கம் போகும் நெல்சன்?

image

‘ஜெயிலர் 2’ படத்திற்கு பிறகு, இயக்குநர் நெல்சன் தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜூனியர் NTR நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அல்லு அர்ஜுன் நடிக்க இருந்ததாகவும், ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News October 6, 2024

அடிக்கடி இடுப்பு வலியும், மூச்சுப்பிடிப்பும் வருதா?

image

சோறு வடித்த கஞ்சியை, ஆறிய பிறகு 6 ஸ்பூன் எடுக்கவும். அதில் 1 ஸ்பூன் பெருங்காயத் தூள், 2 ஸ்பூன் சுக்கு பவுடர், 1 ஸ்பூன் கட்டிக்கற்பூரத் தூளை சேர்க்கவும். அதை ஸ்பூனில் கலக்கி வர, கெட்டியாக மாறும். அதை குழிக்கரண்டியில் வைத்து, அடுப்பில் சூடு காட்டவும். இப்போது அது பேஸ்ட் பக்குவத்துக்கு வரும். சற்று ஆறியதும் இதை நடு முதுகிலும், கீழ் முதுகிலும் நன்றாக தடவவும். மூச்சுப் பிடிப்பு, இடுப்பு வலி ஓடிவிடும்.

News October 6, 2024

அடுத்த ஷாக்: ₹1,814 கோடியில் போதைப்பொருள்

image

ம.பி. தலைநகரம் போபாலில் ₹1,814 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு படை இணைந்து மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 2ஆம் தேதி டெல்லியில் ₹5,600 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

error: Content is protected !!