news

News September 9, 2024

வழக்கு இருந்தாலும் சொத்துக்களை பதியலாம்

image

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சொத்து விற்பனையை பதிவு செய்ய மறுக்கக்கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், அதை விற்பது தொடர்பான பத்திரங்களை சார்- பதிவாளர்கள் திருப்பி அனுப்புவது வழக்கம். இந்நிலையில், தடை ஆணை இல்லாத பட்சத்தில், வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 9, 2024

ராதை வேடத்தில் தமன்னா.. கடும் எதிர்ப்பு

image

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் கலக்கி வருபவர் நடிகை தமன்னா. அண்மையில் சில வெப் சீரியஸ்களில் மிகக் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், கண்ணனின் ராதை போல தன்னை அலங்கரித்து, இன்ஸ்டாகிராமில் அண்மையில் புகைப்படங்களை வெளியிட்டார் தமன்னா. ராதை வேடத்திலும் கவர்ச்சி காட்டுவதா என அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, தனது ராதை புகைப்படங்களை டெலிட் செய்தார்.

News September 9, 2024

குருநாதா.. பாடி தாங்காது குருநாதா!

image

ஜோயி என்ற கரடிக்கு அல்பேனிசம் குறைபாட்டால் முடிகள் வெள்ளையாகிவிட்டன. இது தெரியாமல், இதை பனிக்கரடியாக கருதி, பனிப்பிரதேசத்தில் சிலர் விட்டுள்ளனர். ஜோயியை கண்ட பனிக்கரடிகள், அதை பிரித்து மேய்ந்துள்ளன. பின்னர் உண்மை தெரிந்து, அது கனடாவுக்கே கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன் பிறகும் 5 முறை அது பனிக்கரடிகளிடம் விடப்பட்டு பதம் பார்க்கப்பட்டது. உலகிலேயே துரதிருஷ்ட கரடி என்ற பட்டமும் இதற்கு கிடைத்துள்ளது.

News September 9, 2024

நம் தமிழ்.. நம் பெருமை..!

image

நயாகரா நீர் வீழ்ச்சிக்குள் நுழையும் போது அங்கு ‘நல்வரவு’ என்ற தமிழ் வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ என்ற வரி தமிழிலும், ஜப்பானிய மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள ஆலிவ் மலையில் 23 மொழிகளில் 10 கட்டளைகள் எழுதப்பட்டிருக்கும். அதில் முதலில் இருக்கும் மொழி நம் தமிழ் மொழி.

News September 9, 2024

அஜீரணமா? ஏப்பம் ஏப்பமா வருதா?

image

சிலருக்கு எப்போதும் எதை சாப்பிட்டாலும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். சிறிது நேரத்தில் வயிற்றில் காற்று நிரம்பி புடைத்து விடும். அஜீரணத் தொல்லைகள் தான் இவை. இவர்கள் 2 சிறிதளவு இஞ்சித் துண்டு, 10 மிளகு, 5 சின்ன வெங்காயம் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, அதனுடன் பசு மாட்டு தயிரை நன்றாக கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், அஜீரணம், ஏப்பம் எல்லாம் காணாமல் போய்விடும்.

News September 9, 2024

வாழ்வை மாற்றும் திருக்குறள்!

image

சில திருக்குறள்கள் பலரது வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றி இருக்கின்றன. அப்படி ஒரு குறள்தான் இது. “ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை”. அதாவது, “சோர்வு இல்லாத முயற்சி உடையவனிடம், வெற்றியானது தானாகவே அவன் இருக்கும் இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்” என்பதே இதன் பொருள். இந்தக் குறளை கேட்கும் போதே புல்லரிக்கிறதா? பால்: பொருட்பால். அதிகாரம்: ஊக்குமுடைமை. குறள்: 593.

News September 9, 2024

விஷேச வீடுகளில் வாழை மரம்: இதுதான் காரணமா?

image

விசேஷ வீடுகளில் வாழை மரங்களை வைப்பதற்கு பின்னால் பெரிய விஞ்ஞான காரணம் இருக்கிறது. வாழை இலைகள் பெரிதாக இருப்பதால், அது அதிக அளவிலான ஆக்சிஜனை வெளியிடும். விசேஷங்களில் மக்கள் கூட்டம் கூடும் போது, கார்பன் டை ஆக்சைடு வெளிப்பாடு பொதுவாகவே அதிகமாக இருக்கும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும். இதனை தடுக்கவே, வாழை மரங்களை நம் முன்னோர்கள் விஷேச வீடுகளில் வைத்து வந்துள்ளனர்.

News September 9, 2024

விநாயகர் சதுர்த்தி விழாவில் 3 பேர் பலி

image

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தேனி மாவட்டம் தேவாரத்தில் நேற்று இரவு விநாயகர் சிலையை ஒரு டிராக்டரில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது. இநத் விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 9, 2024

மகாவிஷ்ணுவை விடுவிக்காவிட்டால் போராட்டம்

image

மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டதற்கு அர்ஜுன் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அரசு உதவிப்பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் பைபிள் விநியோகிக்கப்படுகிறது. இதை கேட்க ஆள் கிடையாது. ஆனால், திருக்குறள், ஆன்மீகம் பற்றி பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுவிக்காவிட்டால், இந்து மக்கள் கட்சி சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

News September 9, 2024

யூடியூபை பார்த்து ஆபரேஷன்: சிறுவன் பலி

image

பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வயிற்று வலி காரணமாக அங்குள்ள ஒரு மருத்துவனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அஜித் பூரி, அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பெற்றோரின் அனுமதி இல்லாமலேயே சிறுவனுக்கு ஆபரேஷன் செய்துள்ளார். யூடியூப் வீடியோவை பார்த்து ஆபரேஷன் செய்ததில் சிறுவன் உயிரிழந்தார். புகாரின் பேரில், தலைமறைவான மருத்துவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!