news

News April 16, 2025

GPAY-இல் AUTO PAY வசதி தெரியுமா?

image

தொலைபேசி பில் , EB பில், இன்ஷூரன்ஸ் பில் என மாதாந்திர கட்டணங்களை நேரில் அல்லது இணையத்தில் கட்ட அதிக நேரம் எடுக்கும். ஆனால், GPAY மூலம் மிக எளிதாக கட்டணங்களை செலுத்தலாம். இதற்கு GPAY-ல் செட்டிங்ஸில், சில மாற்றங்களை செய்தாலே போதும். அதன்பின், அந்தந்த தேதியில் GPAY-ல் இருந்து பணம் தானாக எடுக்கப்பட்டு, கட்டணம் செலுத்தப்பட்டு விடும். இந்த வசதி தேவையில்லை எனில், செட்டிங்ஸில் மாற்றம் செய்து நீக்கலாம்.

News April 16, 2025

திமுக முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி காலமானார்

image

குளித்தலை தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கந்தசாமி காலமானார். திமுகவை அண்ணா ஆரம்பித்த காலத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர் கந்தசாமி. கடந்த 1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு அவர் வென்றார். இதையடுத்து, 1971-ம் ஆண்டு தேர்தலிலும் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 16, 2025

JEE விடைக்குறிப்புகள்.. NTA விளக்கம்

image

JEE (முதன்மை) அமர்வு-2-க்கு பதிவேற்றப்பட்ட விடைக்குறிப்புகள் தற்காலிகமானவை என்று தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. JEE இறுதி விடைக்குறிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இறுதி விடைக்குறிப்புகள் மட்டுமே மதிப்பெண்களை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. JEE (முதன்மை) அமர்வு-2-க்கான விடைக்குறிப்பில் பிழைகள் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

10th மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

image

மார்ச் 28ஆம் தொடங்கிய 10ஆம் வகுப்பு தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால், அதிகாரப்பூர்வமாக இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. தேர்வு முடிந்த குஷியில் மாணவர்களும், பெற்றோர்களும் வெளியூர் செல்லும் பயணத் திட்டத்தை தயார் செய்ய தொடங்கியுள்ளனர். மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை ஜாலியாக ஊர் சுற்றுங்கள்.

News April 16, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்

image

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டமுன்வடிவை இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊராட்சிகள் அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள்.

News April 16, 2025

10 நிமிடத்தில் வீட்டிற்கே வரும் சிம் கார்டு

image

சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்வதற்காக, டெலிவரி பார்ட்னராக பிளிங்கிட்டை ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. சிம் டெலிவரி சேவை, சென்னை, ஐதராபாத், புனே, மும்பை உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் கிடைக்கும். சிம் கார்டு டெலிவரி செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின்படி, ஆதார் அடிப்படையிலான KYC அங்கீகாரத்தைப் பயன்படுத்தி எண்ணை செயல்படுத்தலாம்.

News April 16, 2025

காலை 7 மணி வரை மழை

image

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

வரலாற்றில் இன்றைய தினம்

image

> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)

News April 16, 2025

வான்கடே மைதானத்தில் ஜொலிக்கும் ரோகித் பெயர்

image

ரோகித் சர்மாவை கவுரவிக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆம்! வான்கடே மைதானத்தில் ஒரு கேலரி-க்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை வைக்க, மும்பை கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் முன்னாள் BCCI தலைவர் சரத் பவார் மற்றும் பேட்டிங் ஜாம்பவான் அஜித் வடேகர் ஆகியோரின் நினைவாக மேலும் இரண்டு கேலரிகளுக்கு பெயரிடப்படும் என்றும் MCA உறுதிப்படுத்தியுள்ளது.

News April 16, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶எப்போதும் புன்னகையுடன் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வோம், ஏனென்றால் புன்னகையே அன்பிற்கான தொடக்கம் ▶ தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மிகவும் மோசமான வறுமையாகும் ▶ ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை ▶ மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல ▶உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்

error: Content is protected !!