news

News September 9, 2024

முதல் டெஸ்ட் போட்டி: இன்று டிக்கெட் புக்கிங்

image

இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.45க்கு தொடங்குகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச டெஸ்ட் போட்டி செப்.19 நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில், டிக்கெட் விலை ₹1,000 – ₹15,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை insider.in இணையதளம் வாயிலாக பெறலாம்.

News September 9, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி

image

*ரஷ்யா: ஈரானிடம் இருந்து பல கோடி மதிப்பிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது. *அமெரிக்கா: செவ்வாய் கிரகத்துக்கு 2 ஆண்டுகளில் ஸ்டார்ஷிப்கள் எனும் ஆளில்லா விமானம் அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் முடிவு. *வங்கதேசம்: ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை. *பாக்: பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க பாகிஸ்தானில் கல்வி அவசரநிலை அறிவிப்பு.

News September 9, 2024

தப்பிக்கிற வரைக்கும் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

image

சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியா பறந்ததால், உளவுத்துறை மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால் கடுப்பான உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், உயர் காவல் அதிகாரிகள் சிலரை போனில் அழைத்து, அவர் தப்பிச் சென்றது குறித்து கடுகடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களோ சென்னை உளவுத்துறையை கைகாட்ட, அப்படியானால் தலைநகரில் பணிபுரியும் உங்களை வேறு ஊருக்கு மாற்றி விடலாமா? எனக் கேட்டு திட்டியுள்ளார்.

News September 9, 2024

விளையாட்டு துளிகள்

image

*ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் ரந்தீர் சிங் தேர்வு *சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் ஸ்கோரிங்கை உறுதிசெய்ய AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த IBF முடிவு. *இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா சிரியாவை இன்று எதிர்கொள்ளவுள்ளது. *ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் போட்டியில் (செப்.9) இந்திய அணி சீனாவை வீழ்த்தியது.

News September 9, 2024

என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது: மகாவிஷ்ணு

image

பள்ளி மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கையை பரப்பும் விதமாக பேசி கைதானவர் மகாவிஷ்ணு. பல வழக்குகள் பதியப்பட்ட நிலையில், போலீஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். “இளைஞர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதற்காகவே மாணவர்களிடம் பேசினேன். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. என்னை சிறையில் அடைத்தால், கைதிகளை நல்வழிப்படுத்த அவர்களிடமும் உரையாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.

News September 9, 2024

இன்சூரன்ஸுக்கு GST வரி விலக்கு கிடைக்குமா?

image

டெல்லியில் GST கவுன்சிலின் 54ஆவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. Term Insuranceக்கான GST வரி விலக்கு தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல, மருத்துவ காப்பீட்டு பிரீமியம் மீதான GSTஐ ரத்து செய்யவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால், மருத்துவ காப்பீடு மீதான GST 18%இல் இருந்து 5%ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 9, 2024

புத்திர பாக்கியம் அருளும் நெல்லையப்பர்

image

ஐம்பெரும் அம்பலங்களில் தாமிர அம்பலமான நெல்லை வேணுவனநாதரை வழிபட்டால் இல்லறம் செழிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. பிரபஞ்ச தாண்டவத்தை ஈசன் நிகழ்த்திய இத்தலத்திற்கு பாண்டிய மன்னர் நெடுமாறன் கோயில் கட்டி எழுப்பியதாக ஸ்தல புராணம் கூறுகிறது. 45 நாட்கள் விரதமிருந்து இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நெல்லையப்பர்-காந்திமதியம்மைக்கு அர்ச்சனை செய்து வணங்கினால், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

News September 9, 2024

தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்

image

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டில்லி பாபு காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். அவருடைய மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News September 9, 2024

அண்ணன் இப்படி பண்ணிட்டாரே..!

image

விஜய் உடன் நாதக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்த அக்கட்சி நிர்வாகிகள் சிலர், தனித்தே போட்டி என சீமான் அறிவித்ததால் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து, பூத் கமிட்டியை உருவாக்கும் வேலைகளை அவர் முடுக்கிவிட்டுள்ளார். இந்நிலையில், சீமான் உள்ளிட்ட சிலர் சட்டப்பேரவை செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள், அண்ணன் இப்படி செய்துவிட்டாரே என புலம்புகின்றனராம்.

News September 9, 2024

‘G.O.A.T’ ஓடிடி ரிலீஸில் சர்ப்ரைஸ் இருக்கு: VP

image

‘G.O.A.T’ படத்தின் Director’s Cut ஓடிடியில் வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்தாலும், சிலர் படத்தின் நீளம் 3 மணிநேரமாக இருப்பதை குறையாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில், Director’s Cut 3 மணி நேரம் 40 நிமிடங்கள் எனக் கூறிய VP, அதை முழுமையாக ஓடிடியில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

error: Content is protected !!