news

News September 11, 2024

இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?

image

இன்றைக்கு (செப்.11) சர்வதேச மவுன தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை தமிழர்கள் மவுன விரதம் என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடைப்பிடித்து வருகிறார்கள். சரி. ஒரே ஒரு நாள் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? மன அழுத்தம் குறையும். கோபத்தில் இருந்து விடுபட முடியும். ரத்த அழுத்தம் குறைகிறது. மனம் தூய்மையாகிறது. எதிர்மறை சிந்தனைகள் சுத்தமாக இருக்காது.

News September 11, 2024

அண்ணாமலை நாகரிகம் இல்லாதவர் : ஆர்.பி. உதயகுமார்

image

அண்ணாமலை அரசியல் நாகரிகம் இல்லாதவர் என அதிமுக EX மினிஸ்டர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். இபிஎஸ்.சை தற்குறி என்று அண்ணாமலை விமர்சித்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், எச்.ராஜா உள்ளிட்டோர் அரசியல் நாகரிகம், பண்பாடு கொண்டவர்கள் என்று பதிலளித்தார். அண்ணாமலை IPS அதிகாரியாக இருந்து இருக்கலாம், ஆனால் தாங்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

News September 11, 2024

இன்றே கடைசி: இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை

image

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் 405 இடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதில், 279 தொழிற்பழகுநர் இடங்கள். எஞ்சிய 126 இடங்கள் எலக்ட்ஷிசியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்டவை ஆகும். இந்த வேலைக்கான விண்ணப்பப்பதிவு, இந்திய அணுசக்தி நிறுவன இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள்.

News September 11, 2024

12 ராசியினருக்கு 12 விநாயகர் வழிபாடு

image

12 ராசிகாரர்களும் வழிபட வேண்டிய விநாயகர் வடிவம் குறித்து ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ளலாம். *மேஷம்: வீர கணபதி *ரிஷபம்: ஸ்ரீ வித்யா கணபதி *மிதுனம்: லட்சுமி கணபதி *கடகம்: ஹேரம்ப கணபதி *சிம்மம்: விஜய கணபதி *கன்னி: மோகன கணபதி *துலாம்: ஷிப்ர பிரசாத கணபதி * விருச்சிகம்: சக்தி கணபதி *தனுசு: சங்கடஹர கணபதி *மகரம்: யோக கணபதி *கும்பம்: சித்தி விநாயகர் *மீனம்: பால கணபதி. SHARE IT

News September 11, 2024

மஹா விஷ்ணு விவகாரம், பாஜகவின் சதி: திமுக

image

மஹா விஷ்ணு விவகாரம் பாஜக, RSS செய்கின்ற சதி என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் RS பாரதி கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குழப்பம் ஏற்படுத்த பாஜக, RSS பார்ப்பதாகவும், இதை முளையிலேயே கிள்ளி எரிவது அவசியம், இல்லையேல் பிரச்னை பெரிதாகி விடும் என்றார். மஹா விஷ்ணு பேசிய விதம் தவறு, அவர் மீது சரியான நடவடிக்கையே அரசு எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

News September 11, 2024

AXIS, HDFC வங்கிகளுக்கு RBI அபராதம்.. ஏன் தெரியுமா?

image

AXIS, HDFC வங்கிகளுக்கு RBI அபராதம் விதித்துள்ளது. வங்கி நடைமுறைகள், டெபாசிட் வட்டி தொடர்பான விதிகளை கடைபிடிக்காதது உள்ளிட்டவற்றுக்காக AXIS வங்கிக்கு ₹1.91 கோடி அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை,, வங்கியின் ரெகவரி ஏஜெண்ட் செயல்பாடு போன்ற விதி மீறலுக்காக HDFC வங்கிக்கு RBI ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஆய்வு நடத்தி இந்த விதி மீறலை கண்டுபிடித்ததாக RBI குறிப்பிட்டுள்ளது.

News September 11, 2024

ஸ்தம்பிக்கும் ஆதார் மையங்கள்! வதந்தியே காரணம்

image

ஆதார் அட்டை பெற்று 10 வருடம் மேல் ஆனவர்கள், அதிலுள்ள விவரங்களை புதுப்பிக்க செப்.14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவகாசம் முடிந்துவிட்டால் ஆதார் செல்லாது என்ற வதந்தியே இதற்கு காரணம். செப்.14 வரை இலவசமாக ஆதார் விவரங்களை புதுப்பிக்கலாம். அதற்கு பிறகு ரூ.50 கொடுத்து புதுப்பிக்க வேண்டும். ஆன்லைனிலும் இதை புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதே உண்மை.

News September 11, 2024

இன்று முதல் 6 நாட்களுக்கு மழை

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நாளை முதல் 16ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னை நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

News September 11, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 11, 2024

மெட்ரோ ரயில் பணிக்கு அள்ளி வழங்கிய மத்திய அரசு

image

தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி. டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பட்ஜெட்டில் ரூ.21,247 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் ரூ.17.31 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது மொத்த நிதியில் 80 சதவீதம். ஆனால், தமிழகம், மே. வங்கத்துக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

error: Content is protected !!