news

News September 11, 2024

குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சருமப் பொருட்கள்

image

குழந்தைகளின் நாளமில்லா சுரப்பிகளில், சருமப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் ஜார்ஜ் மேசன் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 4-8 வயதுடைய 630 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சன்ஸ்கிரீன், ஹேர் ஆயில், லோஷன்ஸ் உள்ளிட்ட சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்திய குழந்தைகளிடம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

News September 11, 2024

BJP & PMK-வை அழைக்காதது ஏன்? வன்னி அரசு பதில்

image

மது ஒழிப்பு மாநாட்டுக்கு பாமக, பாஜகவுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு VCK கட்சியின் வன்னி அரசு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மது போதையை விட சாதிய போதையும், மத போதையும் ஆபத்தானது என்பதால் இரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அதிமுகவை அழைத்ததால் திமுக கூட்டணியில் முரண்பாடு என்ற தகவல் தவறானது என்றும் விளக்கமளித்துள்ளார்.

News September 11, 2024

தனுஷுக்கு தயாரிப்பாளர் சங்கம் க்ரீன் சிக்னல்

image

தனுஷ் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. 2 படங்களுக்கு அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு கால்ஷீட் தரவில்லை என அவர் மீது புகார் எழுந்தது. இதனால், அவருக்கு ரெட் கார்டு விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டது. இந்நிலையில், ஒரு தயாரிப்பாளருக்கு படத்தை நடித்துக் கொடுக்கவும், மற்றொருவருக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்கவும் தனுஷ் தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.

News September 11, 2024

பொது அறிவு கேள்விகளுக்கு விடைகள்

image

இன்று 10.21 மணிக்கு பொது அறிவு பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே 1. 8 லிட்டர் 2. நியூசிலாந்து 3. பாத்திமா பீவி 4. அல்பேனியா 5. விஸ்வநாதன் ஆனந்த் 6.அயர்லாந்து. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 11, 2024

ஜாமின் மனுவை திரும்பப்பெற்ற மகாவிஷ்ணு

image

ஜாமின் மனுவை மகாவிஷ்ணு திரும்பப் பெற்றுள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி வாபஸ் பெற்றுள்ளார். தனக்கு வழக்கறிஞர் தேவையில்லை என மகாவிஷ்ணு கூறியதால், அவரின் வழக்கறிஞரும் விலகினார். முன்னதாக, 2 பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2024

ஓய்வூதிய திட்டங்கள்: UPS, NPS

image

UPS ஓய்வூதிய திட்டம் 24 வருடம் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும். இதில் அவர்களுக்கு, கடைசியாக வாங்கிய ஒருவருட சம்பளத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். NPS திட்டம் சம்பளத்தின் 10% தொகையும், அரசு சார்பில் 14% தொகையும் வழங்கப்படும் 2004 மேல் பணியில் சேர்ந்தவர்களுக்கு UPS போல் 50% தொகை வழங்கப்படுகிறது ஆனால் NPS ரிஸ்குடன் கூடிய அதிக வருமானம் வழங்கும். இத்திட்டங்கள் தனிநபரின் விருப்பத்தேர்வாகும்.

News September 11, 2024

எத்தனை முறை திருமணம் செய்து வைப்பீர்கள்? திவ்யா

image

தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக வெளியான செய்தியை நடிகை திவ்யா மறுத்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “ஊடகங்களால் எனக்கு பலமுறை திருமணம் நடந்துள்ளது. நான் திருமணம் செய்து கொண்டால், உங்களிடம் தெரிவிக்கிறேன். சரிபார்க்கப்படாத ஆதாரங்களில் இருந்து வரும் வதந்திகளை பரப்பாதீர்கள்” என பதிவிட்டுள்ளார். 2013இல் மாண்டியாவில் CONG சார்பாக போட்டியிட்ட அவர் எம்.பியாக தேர்வானார்.

News September 11, 2024

விடைத்தாள் திருத்தும் பணியில் AI தொழில்நுட்பம்?

image

கல்லூரி விடைத்தாள் திருத்தும் பணியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, சரியான பதில்கள் ஸ்கேன் செய்யப்பட்ட AI இயந்திரத்தில், மாணவர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத் தாள்கள் அனுப்பப்படும். AI விடைத்தாளை ஆய்வு செய்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து ஆசிரியர்களை எச்சரிக்கும். முதல்கட்டமாக 4 பல்கலை.யில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

News September 11, 2024

₹1 கோடி செல்வத்தை சேர்ப்பதற்கான வழிகள்…

image

SIP முறையில் பணத்தை சேர்த்தால் எளிதாக ₹1 கோடி இலக்கை அடையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, ஆண்டுக்கு சராசரியாக 15% ரிட்டர்ன் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ₹3,500 முதலீடு செய்தாலே, 25 ஆண்டுகளில் ₹1 கோடி சேர்க்கலாம். *தங்கம் மூலம் ₹1 கோடி சேர்க்க மாதம் ₹7,500 முதலீடு செய்ய வேண்டும். *PPF, FD மூலம் சேர்ப்பதாக இருந்தால் மாதம் ₹12,000 முதலீடு செய்ய வேண்டி இருக்கும். உங்கள் தேர்வு எது?

News September 11, 2024

டெல்லியில் நில அதிர்வு

image

டெல்லியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்களிடையே அச்சம் நிலவுகிறது. நில அதிர்வுகளில் சேதம் எதுவும் ஏற்பட்டதா எனத் தகவல் இல்லை.

error: Content is protected !!