India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வக்ஃப் சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மமதா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு ஊடுருவல்காரர்களை தடுக்க தவறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளன. மாநிலத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன.
➤மேஷம் – சாந்தம் ➤ரிஷபம் – சிரமம் ➤மிதுனம் – களிப்பு ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – பகை ➤கன்னி – வரவு ➤துலாம் – ஆர்வம் ➤விருச்சிகம் – பிரீதி ➤தனுசு – கவனம் ➤மகரம் – உழைப்பு ➤கும்பம் – யோகம் ➤மீனம் – பணிவு.
கடந்த ஐபிஎல் சீசனில் KKR அணிக்கு கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர், நடப்பு ஆண்டு பஞ்சாப்பை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். குறிப்பாக, இன்றைய த்ரில் போட்டியில் ஷ்ரேயசின் கேப்டன்சி முடிவுகள் பாராட்டுகளை பெறுகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, பவுலர்களை கச்சிதமாக பயன்படுத்தியது, குறைவான ரன்கள் என்றாலும் வெற்றிகரமாக defend செய்தது என்று அவர் கலக்கியிருக்கிறார்.
மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆணையர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார். மேலும் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த 10 இடங்களில் மர்மமான அலறல்கள், மாய உருவங்கள், விவரிக்க முடியாத உணர்வு, தற்கொலைகள் என அமானுஷ்ய நடமாட்டங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது: *டிமான்ட்டி காலனி *பெசன்ட் கார்டன் *புரோக்கன் பிரிட்ஜ் *வால்மீகி நகர் *பெசன்ட் அவென்யூ ரோட் *ECR சாலை *கரிகாட்டுக் குப்பம் *சென்னை கிறிஸ்தவ கல்லூரி (ஒரு அறை) *புளூகிராஸ் ரோட் *திருவண்ணாமலை ஹாண்டட் ஹவுஸ். உங்கள் ஊரில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கா?
மாநில சுயாட்சி விவகாரத்தில் முன்னாள் CM கருணாநிதி முதல்முறையாக உயர்மட்ட குழுவை அமைத்தார். 1969-ல் நீதிபதி ராஜமன்னார் ஆணையத்தை அமைத்தார். அதைத் தொடர்ந்து 1984-ல் MGR நீதிபதி சர்க்காரியா ஆணையம் அமைத்தார். அதையடுத்து 2002-ல் ஜெயலலிதா நீதிபதி வெங்கடாசாலையா ஆணையத்தையும், 2010-ல் கருணாநிதி, நீதிபதி பூஞ்சி ஆணையத்தையும் அமைத்தனர். தற்போது மு.க.ஸ்டாலின் நீதிபதி குரியன் ஜோசப் குழுவை அமைத்துள்ளார்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தின் மகனாக நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக ‘பிரேமலு’ பட ஹீரோ நஸ்லேன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில் நடித்து வந்ததாகவும், அதன் காரணமாக GBU படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ₹100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.
EMMY விருது வென்ற பிரிட்டன் நடிகை ஜீன் மார்ஸ் (90) காலமானார். 1970களில் வெளியான அப்ஸ்டேர்ஸ், டவுன்ஸ்டேர்ஸ் சீரிஸ் மூலம் பிரபலமானவர் ஜீன்ஸ் மார்ஸ். லண்டனில் வசித்த அவர் ஞாபக மறதி நோயால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். ஈகிள் ஹேஸ் லேண்டட், ஹவுஸ் ஆப் எலியட் உள்ளிட்ட பல சீரிஸ்களில் நடித்துள்ள அவருக்கு, 1975இல் EMMY விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகத்துல டைட்டானிக் கப்பலை தெரியாதவங்களே இருக்க முடியாது. உலகத்துலயே பெருசாவும், பாதுகாப்பானதாவும் கட்டப்பட்ட இந்த கப்பல், தன்னுடைய முதல் பயணத்துலயே கடல்ல மூழ்கிடுச்சி. அதோட நினைவு தினம் தான் இன்று. 1912ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி இரவு இந்தக் கப்பல் பனிப்பாறை மேல மோதி, ஏப்ரல் 15ஆம் தேதி மொத்தமாக மறைந்தது. இதில், 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமா இறந்து போனாங்க.
குஷ்பு X-ல் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்த பலர் இது உண்மைதானா இல்லை AI வேலையா என எண்ணும் அளவுக்கு உள்ளது. எடை குறைந்து மாடர்ன் டிரெஸில் குஷ்புவை பார்க்கும் போது இளம் நடிகை போல் காட்சியளிக்கிறார். முதல் படத்தில் பார்த்த அ அதே லுக்குடன் 54 வயதிலும் இருக்கிறார் என்றால் என்ன சொல்வது. இதனிடையே அவரை கிண்டல் செய்து பதிவிட்டவர்களுக்கு குஷ்பு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.