news

News September 11, 2024

கடந்த ஆண்டு இதே நாளில் இந்தியா செய்த சம்பவம்

image

கடந்த ஆண்டு இதே நாளில் (செப்.11) ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் (56), கில் (58), கோலி (122*), கே.எல்.ராகுல் (111*) அதிரடியால் 356 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பாக்., குல்தீப்பின் (5விக்கெட்) சுழலில் சிக்கி 32 ஓவரில் 128/10 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

News September 11, 2024

3 மணி நேரத்திற்கு மழை கொட்டப்போகுது

image

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று கூறியுள்ளது.

News September 11, 2024

பாடகிக்கு குழந்தை தருவதாக மஸ்க் சர்ச்சை பதிவு

image

டெய்லர் ஸ்விஃப்டுக்கு குழந்தை தருவதாக எலான் மஸ்க் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். மேலும், Taylor Swift – Childless Cat Lady என்று பதிவிட்டிருந்தார். இதற்கு டிரம்ப் ஆதரவாளர் மஸ்க், நான் உங்களுக்கு குழந்தையை தருகிறேன், உங்கள் பூனையை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன் என கூறியிருக்கிறார்.

News September 11, 2024

2025 IPL தோனி விளையாட மாட்டாரா?

image

2025 IPL தொடரில் CSK EX கேப்டன் தோனி விளையாடுவாரா, மாட்டாரா என்று மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது. 2024 சீசனுடன் தோனி ஓய்வு பெறக்கூடும் எனக் கூறப்பட்டது. எனினும், அவர் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், எக்ஸ் பக்கத்தில் CSK நிர்வாகம் வெளியிட்ட பதிவில், “முக்கியமான ஒன்று இருக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து, தோனி குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

News September 11, 2024

‘வாழை’ OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

image

‘வாழை’ திரைப்படம் வருகிற 27ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தமிழில் மட்டுமே வெளியாகும் எனவும், மற்ற மொழிகளின் வெளியீடு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. திரைத்துறையின் பல முன்னணி பிரபலங்களும் படத்தை வாழ்த்தி வரவேற்றனர்.

News September 11, 2024

விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாட்டம்

image

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19ஆம் தேதி தனது பிறந்த நாளை, சக விண்வெளி வீரர் பெரி வில்மோருடன் விண்வெளியில் கொண்டாட உள்ளார். இருவரும் கடந்த ஜூன் 6ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். பூமி திரும்ப தாமதமாவதால் விண்வெளியில் பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இது அவரின் 2ஆவது விண்வெளி பிறந்த நாள் கொண்டாட்டமாகும்.

News September 11, 2024

பதக்கம் வென்றவரின் சோகமான கடந்த காலம்

image

பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய முன்னாள் ராணுவ வீரர் ஹொகடோ ஹொடோஷே சேமா, கன்னி வெடி தாக்குதலில் தனது ஒரு காலை இழந்ததாக கூறியுள்ளார். J&K- யில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது இச்சம்பவம் நடந்ததாகவும், இனி பிறந்த குழந்தை போல் தவழ்ந்து செல்லத்தான் வேண்டியிருக்கும் என வருந்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், செயற்கை கால் பொருத்திய பிறகே உத்வேகம் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

News September 11, 2024

அடுத்த 2 வாரத்திற்கு வெயில் கொளுத்தும்

image

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைக்காலம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக நேற்று மதுரை, தொண்டி உள்ளிட்ட 7 இடங்களில் வெயில் சதம் அடித்தது. சட்டீஸ்கரில் நிலவும் காற்றழுத்த பகுதியால், தென் இந்தியாவில் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பம் அதிகரித்து வருகிறது.

News September 11, 2024

’96’ படத்தின் 2ஆவது பாகத்திற்கான அப்டேட்

image

‘96’ படத்தின் 2ஆவது பாகத்தின் திரைக்கதை 95% முடிந்து விட்டதாக அப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். பொதுவாகவே 2ஆம் பாகம் எடுப்பது தனக்கு பிடிக்காது எனவும், ஆனால் தான் எழுதிய கதைகளிலேயே இதுதான் அதிகம் பிடித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். VJS மனைவியிடம் கதை சொன்னதாகவும், மேலும் VJS, திரிஷாவின் தேதிகள் கிடைப்பதைப் பொறுத்து படம் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

தேச பாதுகாப்பிற்கு ராகுல் அச்சுறுத்தல்: அமித்ஷா

image

தேச பாதுகாப்பிற்கு ராகுல் காந்தியும், அவரது கட்சியும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், அங்கு தேச விரோத பேச்சுக்களை பேசுவதாகவும், இது அவருக்கு ஒரு வழக்கமாகிவிட்டதாகவும் அமித்ஷா விமர்சித்துள்ளார். மேலும், பாஜக இங்கு ஆட்சியில் இருக்கும் வரை, இடஒதுக்கீடு மற்றும் தேச பாதுகாப்புக்கு எதிராக யாரும் செயல்பட முடியாது என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!