India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் மலேசியாவை 8-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த தொடரில் இந்தியா தொடர்ச்சியாக பெரும் 3ஆவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் 9 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2ஆம் இடத்தில் கொரியாவும், 3ஆவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. முன்னதாக சீனாவை 3-0, ஜப்பானை 5-1 என்ற கணக்கிலும் இந்தியா வீழ்த்தியது.
‘தி கோட்’ படத்தில் சினேகா நடித்திருந்த கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். ஆனால் அது நடக்காமல் போனதாகவும், படம் பார்த்துவிட்டு சினேகா தான் சிறந்த தேர்வு என நயன்தாரா கூறியதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். கடந்த 5ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்தி என்ன புண்ணியம் என விசிகவுக்கு சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக் வசூல் குறைந்தால் ஆலோசனை நடத்தும் ஆட்சியில் கூட்டணியில் இருந்து கொண்டு அதுபற்றி பேசலாமா என்றும், அதிமுகவை அழைப்பதால் என்ன பயன் எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் தான் கூட்டணி என்று திருமாவளவனால் கூற முடியுமா எனவும் வினவியுள்ளார்.
சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை, 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன், வழக்கில் இருந்து விலகிய நிலையில், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறி, தானே வழக்கில் வாதாடிக் கொள்வதாக நீதிமன்றத்தில் அவர் தெரிவித்து இருந்தார். தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் திரும்பப் பெற்றார்.
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்.5ல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் சமீபத்தில் காங்கிரசில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து AAP சார்பில் இந்தியாவின் முதல் WWE வீராங்கனை கவிதா தலால் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., உடன் தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், AAP தனித்து போட்டியிடுகிறது.
ஆயுள் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முதல்வர் ஒப்புதல் அளித்த பிறகும், தகுந்த காரணங்களை கூறாமல் அதை எப்படி ஆளுநரால் நிராகரிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை முன்வைத்துள்ளது. கோவை சிறையில் உள்ள 10 கைதிகள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மாநில குழுவின் பரிந்துரையில் முதல்வர் அனுப்பிய கோப்புகளை ஆளுநர் நிராகரித்து இருந்தார்.
Petrol, Diesel விலையை லிட்டருக்கு ₹14 குறைக்க வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், Crude Oil விலை குறைந்த நிலையில், அதற்கு இணையாக Petrol, Diesel விலையை குறைக்காதது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவற்றின் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
21ஆம் நூற்றாண்டு இளையோரின் வாசஸ்தலமாக இருக்கும் இணையத்தை தமிழ் களஞ்சியமாக மாற்றியவர் மயூரநாதன். நவீன அறிவுத் தேடல்களை, தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ‘தமிழ் விக்கிப்பீடியா’ பக்கத்தை தனியாளாக உருவாக்கி, மொழி வளர்ச்சிக்கான முன்னெடுப்பை அவர் முடுக்கிவிட்டார். அவரது தொலைநோக்கு சிந்தனை & & அளப்பரிய உழைப்பால் இணைய தேடு மொழிகளில், (1.6 லட்சம் கட்டுரைகள்) தமிழ் முன்னிலை வகிக்கிறது என்றால் மிகையில்லை.
காஷ்மீரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹3,000 வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார். காங்., கூட்டணி வென்றால் அனைத்து குடும்பங்களுக்கும் ₹25 லட்சத்தில் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும், குடும்பத்துக்கு 11 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும், சுய உதவிக் குழு பெண்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் மரியாதை தருபவர்களாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கல்வி, பிசினஸ் எதுவாக இருந்தாலும் முன்னணியில் இருக்க விரும்புவீர்கள். எதையும் மறைத்துப் பேச தெரியாமல், உள்ளதை உள்ளபடியே பேசுவீர்கள். சட்டென கோபம் கொள்ளும் குணமும், உங்களிடம் இருக்கும் என்கிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.