India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்த ஆண்டில் (2024) இதுவரை அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் 10 இடங்களில் ஜெய்ஸ்வால் (1033), ரோஹித் (990), கில் (821) ஆகியோர் 3, 4 மற்றும் 9ஆவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை வீரர்கள் நிசங்கா (1135), BKG மெண்டிஸ் (1111) முதல் 2 இடங்களில் உள்ளனர். ரூட் 5, ரிஸ்வான் 6, PHKD மெண்டிஸ் 7, ஜர்டான் 8, நிசாகத் கான் 10 ஆகிய இடங்களில் உள்ளனர்.
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 6,224 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,224ல் இருந்து 6,704ஆக உயர்கிறது. இத்தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X-Blade பைக்கை தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இருந்து ஹோண்டா நிறுவனம் நீக்கியுள்ளது. அந்நிறுவனம் இந்திய சந்தையில் X-Blade பைக் விற்பனையை நிறுத்த இருப்பதாலேயே நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. 2018இல் அறிமுகப்படுத்தப்பட்ட X-Blade பைக்கானது மற்ற 160CC மோட்டார் பைக்குகளைப் போல இளைஞர்களை பெரியளவில் ஈர்க்கவில்லை என்றே கூறலாம். இதற்கு அதன் விற்பனை எண்ணிக்கையே சாட்சி.
வீட்டு வாசலில் தொங்க விடப்பட்டிருக்கும் படிகாரம் உள்ளிட்டவை திருஷ்டிக்கானவை அல்ல. உண்மையில் இதை உலகின் முதல் First Aid கிட் என்றே சொல்லலாம். அக்காலத்தில், பாம்பு கடித்துவிட்டால் விஷம் வேகமாக ஏறாமலிருக்க படிகாரத்தை நீரில் கரைத்துக் கொடுப்பர். ஒருவேளை அவர்கள் சுய நினைவை இழந்தால் மிளகாய் & எலுமிச்சையை நெருப்பில் போட்டுப் புகைப்பர். இதன் மூலம் உயிராபத்தில் இருந்து பாதிக்கப்பட்ட நபரை காக்க முடியுமாம்.
வார இறுதி நாள்கள், முகூர்த்தம், மிலாது நபி என தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,515 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு 540 பேருந்துகளும், கோவை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து 250 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னையில் இருந்து பிற பகுதிக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பகலில் படிப்பதை விட இரவில் படிப்பதால் செல்போன் பயன்பாடு, வீட்டு சத்தம், சமூக வலைதளம் போன்றவற்றிலிருந்து கவனச்சிதறல் சற்று குறைவாக இருக்கும். பகலில் இருக்கும் வேலைகளும் சிந்தனைகளும் இரவில் குறைவாக இருப்பதால் புதுமையான யோசனைகளும் தோன்றும். தூங்குவதற்கு முன்பு மூளை அனைத்தையும் நினைவுகூரும் அப்போது படிப்பதை நினைவில் எளிதாக வைத்துக்கொள்ளும். இரவில் படிப்பது பகல் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், விஜய் அரசியல் குறித்தான கேள்விக்கு, ” விஜய்க்கு திரையுலகில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் களம் என்பது வேறு, இதற்கு முன் அவர் மக்கள் பிரச்னைகளில் எந்த ஈடுபாடும் காட்டியதில்லை. மக்களுடன் நெருக்கமான தொடர்பும் அவருக்கு கிடையாது. என்ன தாக்கத்தை அவர் ஏற்படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை வைத்து ‘S44’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 50%க்கும் மேல் முடிவடைந்துள்ளது. அதேசமயம், கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். அதாவது, அடுத்த படத்திற்கான கதையை ஜெயம் ரவியை சந்தித்து கூறியுள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்ததால், அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய வானதி சீனிவாசன், “மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதல்வர், விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை. திருமாவளவனுக்கு திமுக கூட்டணியில் என்ன பிரச்னை? என்று தெரியவில்லை. இந்த மாநாட்டின் மூலம் அவர், திமுகவிற்கு ஏதோ சொல்ல வருகிறார் என்று தான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகள் நிர்வகிக்க அதானி நிறுவனத்துடன் கென்யா அரசு ஒப்பந்தம் போட்டது தெரிந்ததே. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து விமான நிலைய ஊழியர்கள் (பணி இழக்க நேரிடலாம் என்பதால்) வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால், அந்நாட்டில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.