news

News September 12, 2024

ITI மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

ITI சேர விரும்பும் மாணவர்களுக்கு மாதம் ₹14,000 ஊக்கத்தொகையுடன் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. MMV, மெக்கானிக் டீசல், எலக்ட்ரீசியன், ஆட்டோ எலக்ட்ரீசியன், வெல்டர், ஃபிட்டர், பெயிண்டர் ஆகிய பிரிவுகளில் 500 காலியிடங்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 26ஆம் தேதிக்குள் குரோம்பேட்டை போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம்.

News September 12, 2024

இளைஞர்களுக்கு வழிவிட்டாக வேண்டும்: துரைமுருகன்

image

திமுக நிகழ்ச்சியில் இன்று பேசிய துரைமுருகன், “இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும்” எனத் தெரிவித்தார். திமுகவில் சீனியர் அமைச்சர்கள் புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் என உதயநிதி அண்மையில் பேசியிருந்தார். மேலும், முதல்வர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என பேசப்படும் நிலையில், துரைமுருகனின் இந்த பேச்சு கவனிக்கத்தக்கது.

News September 11, 2024

தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை

image

தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று நடந்த 100மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன் தங்கம் வென்றுள்ளார். அதே பிரிவில் இந்திய வீராங்கனை சுதீக்ஷா வெள்ளி வென்றுள்ளார். செப்.13 தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

News September 11, 2024

இழப்புகளை சந்திக்க ரெடியாக இருக்க வேண்டும்: சன்னி

image

மலையாள சினிமா துறையில் பாலியல் தொல்லை குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலிவுட் நடிகை சன்னி லியோன், “NO சொல்ல வேண்டிய இடத்தில் NO சொல்ல வேண்டும், வெளியேற வேண்டிய இடத்தில் வெளியேற வேண்டும். அதற்காக எத்தகைய இழப்புகள் வந்தாலும், அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” என கூறினார்.

News September 11, 2024

மருத்துவ காப்பீட்டு தொகை நிராகரிப்புக்கான காரணங்கள்

image

மருத்துவ காப்பீட்டு தொகை சரியான நேரத்தில் கிடைக்காததற்கான ஒரு சில காரணங்கள்: *பெயர், வயது, வருவாய் தொடர்பாக தகவல்கள் தவறாக இருப்பது *ஏற்கனவே இருக்கும் நோய் அல்லது பரம்பரை நோய் குறித்து முன்பே கூறாமல் இருப்பது *புகைத்தல், மதுபழக்கம் இருப்பது குறித்து கூறாமல் இருப்பது *பீரிமியம் தொகை செலுத்தாமல் இன்ஷூரன்ஸ் காலாவதியானால் காப்பீட்டை பெற முடியாது.

News September 11, 2024

ODI WC மூலம் இந்தியாவுக்கு 11,000 கோடி வர்த்தகம்

image

கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் ஒருநாள் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது. இத்தொடர் மூலம் இந்தியாவில் 1.39 பில்லியன் டாலர் (ரூ.11,637 கோடி) வர்த்தகம் நடைபெற்றதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது. கிரிக்கெட் பார்க்க வந்த வெளிநாட்டவர்களால் விடுதி, உணவு, போக்குவரத்து ஆகியவற்றில் அதிக வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.

News September 11, 2024

முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்

image

தவெக-வின் மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பை நாளை விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டியில் செப்.23ல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி பெறுவதிலேயே தாமதம் ஆனதாக தெரிகிறது. மாநாடு ஏற்பாடுகள் செய்ய இன்னும் குறுகிய காலமே இருப்பதால், தேதி மாறலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை 11 மணிக்கு விஜய் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.

News September 11, 2024

பாம்பன் பாலத்தை அக்.2ல் திறந்து வைக்கிறார் மோடி

image

மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி அக்.2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாம்பன் ரயில்வே பாலம் திறந்து வைக்கப்பட உள்ளதால், 22 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது.

News September 11, 2024

ராகுல் காந்தியின் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர்

image

அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா அல்லது குருத்துவாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதற்கே சண்டை நடக்கிறது எனப் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் சீக்கிய அமைப்பினர் டெல்லியில் உள்ள ராகுலின் வீட்டை முற்றுகையிட்டு, அவர்மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News September 11, 2024

மூலிகை: பொன்னிற மேனியை அளிக்கும் பொன்னாங்காணி

image

பெயரிலேயே பொன்னை வைத்திருக்கும் பொன்னாங்காணி, நலத்தை வாரி வழங்கும் தாவர தங்கம் என்று அகத்தியர் குணவாகடம் கூறுகிறது. லூபியோல், காம்பஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்தக் கீரையை வேக வைத்து வெண்ணெய்யில் குழைத்து, வெறும் வயிற்றில் காலை வேளையில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், முகப்பூச்சுகளின் ஆதரவின்றிப் பளபளப்பான தேகம் மின்னும்.

error: Content is protected !!