news

News September 12, 2024

சட்டம் அறிவோம்: BNS பிரிவு 281 என்ன சொல்கிறது?

image

மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், வாகனத்தை அவசரமாக அல்லது அஜாக்கிரதையாக பொதுவழியில் ஓட்டுவதும் சவாரி செய்வதும் BNS சட்டப் பிரிவு 281இன் படி குற்றமாகும். இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதம் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத்தண்டனை அல்லது ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

News September 12, 2024

விண்வெளித் தமிழன் சிவன்

image

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக உருவெடுத்துள்ள ISROவின் வளர்ச்சியில் சிவனின் (1982-2022) பங்களிப்பு முக்கியமானது. சந்திரயான் உட்பட பல வெற்றிகளில் பெரும் பங்காற்றிய அவர், ராக்கெட் வடிவமைப்புப் தொடர்பாக ‘சித்தாரா’ எனும் மென்பொருளை உருவாக்கியுள்ளார். மெரிட் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற அவர் ‘மார்க் 3’ என்கிற புதுமையான விண்கலனை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

News September 12, 2024

தவெக மாநாடு: விஜய் இன்று முக்கிய அறிவிப்பு

image

தவெக மாநாடு தேதியை விஜய் இன்று அறிவிக்கவுள்ளார். விக்கிரவாண்டியில் தவெக மாநாடு இம்மாதம் 22ம் தேதி நடக்கலாம் எனக் கூறிய நிலையில், 23ஆம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், குறுகிய காலமாக இருப்பதால் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு தேதி குறித்த தகவலை விஜய் இன்று அறிவிப்பார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

Recipe: செட்டிநாடு இனிப்பு பணியாரம்

image

தேங்காய்த் துருவலுடன் காய்ந்த ஏலக்காய், முந்திரி, வெந்தயம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக்கவும். அதனுடன் பனை வெல்லம், பச்சை அரிசி, உளுந்து சேர்த்து மீண்டும் அரைத்து எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். சூடான குழிப்பணியாரக் கல்லில் நெய் காய்ந்ததும் இந்த மாவை ஊற்றவும். பொன்னிறமாக மாறும்வரை இருபக்கமும் அவற்றை திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால், சுவையான செட்டிநாடு பணியாரம் ரெடி.

News September 12, 2024

பொங்கல்: ஐந்தே நிமிடங்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றது

image

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ம் தேதிக்கு நடைபெற்ற ரயில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. 120 நாள்களுக்கு முன்பே முன்பதிவு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜனவரி 10ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தகவலை அறிந்து உடனடியாக ஆன்லைனிலும், டிக்கெட் மையங்களிலும் திரண்டு வந்து ஏராளமானோர் விரைந்து முன்பதிவு செய்தனர்.

News September 12, 2024

NIA அமைப்பில் வேலைவாய்ப்பு.. ₹1.77 லட்சம் சம்பளம்

image

NIAவில் DSP பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. டெபுடேஷன் அடிப்படையிலான 17 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கல்வித் தகுதி உள்ளிட்டவற்றை NIA இணையதளத்தில் அறியலாம். மாத சம்பளமாக ₹56,100- ₹1,77, 500 வரை வழங்கப்படும். “SP (admin ), NIA Headquarters, Lodhi road, New Delhi -110003” என்ற முகவரிக்கு தபாலில் விண்ணப்பிக்கலாம் (அ) spadmin.nia.gov. in இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

News September 12, 2024

திருப்பூர் அழைத்து சென்று மகாவிஷ்ணுவிடம் விசாரணை

image

மகாவிஷ்ணுவை விசாரணைக்காக திருப்பூருக்கு போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். சென்னையில் உள்ள 2 பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றியதாக வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரை 3 நாள் காவலில் எடுத்துள்ள போலீசார், திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

News September 12, 2024

மனோவின் 2 மகன்களை கைது செய்ய தீவிரம்

image

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் 2 மகன்களை கைது செய்ய 2வது நாளாக சென்னை போலீஸ் தேடி வருகிறது. வளசரவாக்கத்தில் உள்ள வீட்டை வேடிக்கை பார்த்த 2 பேரை முட்டிப்போட வைத்து மதுபோதையில் தாக்கியதாக மனோ மகன்கள் சாகீர், ரபீக் உள்ளிட்ட 5 பேர் மீது 3 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இதில் 2 பேரை கைது செய்த போலீஸ், மனோவின் 2 மகன்கள் உள்ளிட்ட 3 பேரை தேடுகிறது.

News September 12, 2024

கண்ணாடி வேண்டாம் என்று விளம்பரம்.. லைசென்ஸ் ரத்து

image

PresVU மருந்து தயாரிக்க அளித்த லைசென்ஸை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DCGI) ரத்து செய்துள்ளது. வயோதிகத்தால் ஏற்படும் பிரஸ்பயோபியா மூலம் கிட்டப் பார்வை பாதிக்கப்பட்டு இருந்தால், PresVU மருந்தை கண்ணில் விட்டால் போதும் என ENTOD நிறுவனம் விளம்பரம் செய்தது. இதை நம்பி பயன்படுத்தும் நோயாளிகள் பாதிக்கப்படலாம் எனக் கூறி, மருந்து தயாரிக்க, விற்க அளிக்கப்பட்ட லைசென்ஸை DCGI ரத்து செய்துள்ளது.

News September 12, 2024

பாட்னா குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேருக்கு தண்டனை குறைப்பு

image

2013 பாட்னா குண்டுவெடிப்பு வழக்கில் 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. மோடி பங்கேற்ற கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்க்கும் மேல்முறையீட்டை விசாரித்த பாட்னா ஐகோர்ட், 6 பேரும் இளைஞர்கள், வெளி தொடர்பில்லாதவர்கள் எனக் கூறி, 4 பேருக்கு 30 ஆண்டு சிறை, 2 பேருக்கு ஆயுள் சிறையாக குறைத்தது.

error: Content is protected !!