India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது சேவை வசதிகளை மேம்படுத்த பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஸ்டேட்டஸ் நேர அளவை உயர்த்தியுள்ளது. அதன்படி, இனி 90 விநாடி வீடியோக்களை ஸ்டேட்டஸாக வைக்கலாம். தற்போது வரை 30 விநாடி வீடியோக்களை மட்டுமே ஸ்டேட்டஸாக வைக்க முடியும். தற்போது இந்த புதிய வசதி BETA பயனர்களுக்கு கிடைக்கும் நிலையில், விரைவில் அனைத்து பயனர்களும் பயன்படுத்தலாம்.
மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் சஹால், ஆர்ஜே மஹ்வாஷுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், KKRக்கு எதிரான போட்டியில் சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து மஹ்வாஷ் தனது இஸ்டாவில், இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு, என்ன ஒரு திறமை!, IPL-லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதாக சஹாலை பாராட்டியதுதான் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 308 ▶குறள்: இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. ▶பொருள்: தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
ஊர்வசி ரவுத்தேலா குத்தாட்டம் போட்ட ‘ஜாட்’ படத்தின் ‘சாரி போல்’ பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல், ‘ரெய்டு 2’ படத்தில் ‘நாஷா’ பாடலில் தமன்னா குத்தாட்டம் போட்ட வீடியோ 21 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதனிடையே ரசிகர் ஒருவர் ‘நாஷா’ பாடலை விட ஊர்வசியின் பாடலே நன்றாக இருப்பதாக கமெண்ட் செய்ய, அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஊர்வசி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உடனே நீக்கியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் அடுத்தடுத்து சர்ச்சையாக பேசியது விவாத பொருளாக மாறியுள்ளன. இந்நிலையில், திமுக கூட்டணியின் அங்கம் வங்கிக்கும் காங்., எம்பி மாணிக்கம் தாகூர், அதிகார மமதையால் திமுக அமைச்சர்களின் பேச்சுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், சர்ச்சை பேச்சு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உடனே நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
▶ஏப்ரல் 16- சித்திரை- 03 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12 : 00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7 : 30 AM – 9:00 AM ▶ குளிகை: 10 : 30 12 :00 AM ▶ திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: தேய்பிறை
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி கேகேஆர் Vs சஹால் என்று தான் இருந்தது. 111 என்ற இலக்கை கூட தொட முடியாமல் 95 ரன்களுக்கு KKR ஆல் அவுட் ஆனது. இந்த ஐபிஎல் சீசனில் இதுதான் மிகவும் மோசமான ஸ்கோர். இப்போட்டியில் சஹால் 4 விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் IPL-லில் அதிக முறை 4 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். முன்னதாக சுனில் நரேன் 8 முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
‘எம்புரான்’ வெற்றிக்கு பிறகு ஹிந்தியில் உருவாகும் ‘தாய்ரா’ படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார். ராசி, தல்வார், சாம் பகதூர் உள்ளிட்ட படங்களை இயக்கிய பெண் இயக்குனர் மேக்னா குல்சார் இந்த படத்தை இயக்குகிறார். முதல்முறையாக கரீனா கபூருடன் பிரித்விராஜ் இணைந்து நடிக்க உள்ளார். பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதற்காகவே ஆர்வமாக இப்படத்தை ஒப்புக்கொண்டதாக கரீனா தெரிவித்துள்ளார்.
அன்புமணியை பாஜக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது ஜனநாயக படுகொலை என்று திலகபாமா கடுமையாக விமர்சித்தார். இதனால், ஆத்திரமடைந்த வடிவேல் ராவணன், பாமகவில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார். இது பாமகவில் உள்கட்சி மோதலுக்கு மேலும் வழிவகுத்தது. இந்நிலையில் இருவரையும், தனது இல்லத்திற்கு அழைத்து அன்புமணி சமரசம் செய்து வைத்து, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இன்று (ஏப்ரல் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.