India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை முதல் வரிசையில் அமர வைத்து இபிஎஸ் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இக்கூட்டத்தில் உள்கட்சி பிரச்னை, 2026 தேர்தல், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளில் சிக்கிய பல அமைச்சர்களை ஏன் CM ஸ்டாலின் இன்னும் அமைச்சரவையில் வைத்திருக்கிறார் என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் சரியாக பதில் வரவில்லை. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், மக்களுடைய நம்பிக்கையை இழக்க செய்கிறது. இதற்கு முதல்வர் தான் பதில் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
பலருக்கும் இந்த விஷயமே தெரியாது. இந்த Expiry date குறித்த தகவல் நேரடியாக கிடைப்பதில்லை. மறைமுகமாக தான் அறிந்து கொள்ளலாம். ஒரு போனின் செக்யூரிட்டி அப்டேட் எப்போது நிற்கிறதோ, அதுவே அதன் Expiry date. Settings-> about-> செக்யூரிட்டி அப்டேட்டில் இந்த தகவலை அறியலாம். ஆண்ட்ராய்டு போன்கள் 3 வருடங்களுக்கும், ஐபோன்கள் 7 வருடம் வரையும் இந்த அப்டேட்டை வழங்குகின்றன. உங்க போன் Expiry எப்போ?
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் பயணிகள் வாகனம் வெடித்து சிதறியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. இதில், ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முழு தகவல்களுக்கு இணைந்திருங்கள் Way2News-உடன்.
பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதனை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு எதிரான யுத்தம் தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். ஜாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடு அல்லாமல், இந்தியர் என்ற உணர்வோடு நாம் அனைவரும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு, முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கிய நிலையில், இந்த மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு முழுவதும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கஸ்தூரி ரங்கன்(84), இன்று காலமானார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கஸ்தூரி ரங்கன், இஸ்ரோ தலைவராக 9 ஆண்டுகள் பதவி வகித்தார். விண்வெளித் துறையில் நாடு பெரிய சாதனைகள் புரிய இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். ராஜ்ய சபா எம்பி, திட்ட கமிஷன் உறுப்பினர், தேசிய கல்விக் கொள்கை வரைவு குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.