India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராகுல் காந்திக்கு (54) விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் மகள் சோலாப்பூர் எம்.பி பிரணிதி ஷிண்டேவை (44) ராகுல் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இத்தகவலை, அவரது குடும்பத்தினரோ, காங்கிரஸ் கட்சியோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திறமையாக பணியாற்றிய அவர், அரசியல் கட்சி வேறுபாடு கடந்து அனைவருடனும் எளிமையாக பழகக்கூடியவர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார். யெச்சூரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் எனவும் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, INDIA கூட்டணி அமைய முக்கிய பங்காற்றியவர் சீதாராம் யெச்சூரி. 1996, 2004, 2009 காலகட்டங்களில் மத்தியில் கூட்டாட்சி மலர வித்திட்டவர். இக்காலக்கட்டங்களில் கட்சிகளுக்கிடையே குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவர காரணமானவர். இந்த செயல்திட்டத்தின் விளைவாகவே, கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் இருவரும் விவாகரத்திற்குப் பிறகு தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அவனது பொம்மைகள் வழியனுப்புவது போன்ற இன்ஸ்டா போஸ்டை பகிர்ந்த அவர், மழலையர் பள்ளியோ..உயர்நிலைப் பள்ளியோ.. அதே கதைதான். என் மகன்கள் இப்போதும் பொம்மைகளுடன் விளையாடுகின்றனர். சில விஷயங்கள் மாறுவதேயில்லை எனப் பதிவிட்டு தனது மகன்களை நினைவு கூர்ந்துள்ளார்.
BSNL 4G சேவை தற்போது பயன்படுத்தப்படும் 4G போன்களில் வேலை செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது. 4G சேவைக்காக BSNL க்கு 700M HZ, 2100 M HZ ஆகிய 2 அலைவரிசையை அரசு ஒதுக்கியுள்ளது. இதில், 700M HZ அலைவரிசையை BSNL பயன்படுத்துகிறது. இது 5G சேவைக்கானது என்பதால் தற்போதைய 4G போனில் BSNL 4G கிடைக்காது.700MHZ கொண்ட 5G போனில் தான் கிடைக்கும். எனவே போனை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயது முதலே நீதிக்காக போராடிய பயமறியா தலைவர், அவசரநிலை காலத்தில் மாணவர் பருவத்திலேயே துணிச்சலுடன் போராடியவர் யெச்சூரி என புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
துலீப் கோப்பை இரண்டாவது போட்டியில் ‘India C’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் ‘India B’ அணி 357-5 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 111, பாபா இந்திரஜித் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். காயம் காரணமாக இரண்டாவது பந்திலேயே வெளியேறிய கேப்டன் ருதுராஜ் பின்னர் மீண்டும் களமிறங்கி 46* ரன்கள் எடுத்துள்ளார். முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என Infosys இணை நிறுவனர் நாராயண மூர்த்தி பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், குழந்தைகள் படிப்பதற்கு, பெற்றோர் வீட்டில் ஒழுக்கமான சூழலை உருவாக்க வேண்டும் என சமீபத்தில் அவர் பேசியது மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. வாரம் 70 மணி நேரம் வேலை செய்தால், குழந்தைகளுக்காக எப்படி நேரம் ஒதுக்க முடியும் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பணிக்கொடையை (Gratuity) தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கான இறப்பு, ஓய்வுகாலப் பணிக்கொடை ₹20 லட்சத்தில் இருந்து, ₹25 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கொடை உயர்வானது, கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக உடலை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.